pcb, iceland x page
கிரிக்கெட்

T20 WC | ”விலகினால் நாங்கள் ரெடி..” - பாகி.யைக் கிண்டல் செய்த ஐஸ்லாந்து.. வைரலாகும் பதிவு!

வங்கதேசத்தைப்போல கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணியிலிருந்து டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக முயற்சித்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

Prakash J

2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே வங்கதேசத்தைப்போல கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணியிலிருந்து டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக முயற்சித்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது.

icc, bcb

ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. எனினும் அதுகுறித்து பாகிஸ்தான் அரசு முடிவு எடுக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார். பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை தொடரைப் புறக்கணிப்பு குறித்த ஊகங்களுக்கு மத்தியில் ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியை கிண்டல் செய்துள்ளது. வங்கதேசத்தைப் போல கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணியிலிருந்து விலக முயற்சித்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்லாந்து, “டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் விரைவில் முடிவெடுக்க வேண்டியது எங்களுக்கு மிகவும் அவசியம். பிப்ரவரி 2ஆம் தேதி அவர்கள் விலகிக்கொண்டால், நாங்கள் உடனடியாகப் புறப்படத் தயாராக இருக்கிறோம். ஆனால், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் கொழும்புக்கு சரியான நேரத்தில் செல்வதற்கு விமான அட்டவணையைத் திட்டமிடுவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. எங்கள் தொடக்க பேட்டருக்கு தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது” என நகைச்சுவையாகப் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.