icc, bcb x page
கிரிக்கெட்

கடைசி கருணை காட்டிய ஐசிசி.. உள்ளே நுழையும் ஸ்காட்லாந்து.. முடிவெடுக்குமா வங்கதேசம்?

2026 டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்ல அணி தொடர்ந்து மறுத்தால், அது வேறு அணியால் மாற்றப்படும் என்று வங்கதேச அரசுக்குத் தெரிவிக்குமாறு ஐசிசி, பிசிபியிடம் தெரிவித்துள்ளது.

Prakash J

2026 டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்ல அணி தொடர்ந்து மறுத்தால், அது வேறு அணியால் மாற்றப்படும் என்று வங்கதேச அரசுக்குத் தெரிவிக்குமாறு ஐசிசி, பிசிபியிடம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் கே.கே.ஆர். அணியிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு பயணம் செய்வதில்லை என்ற முடிவில் வங்கதேசம் உறுதியாக உள்ளது. இதுகுறித்து விவாதிக்க ஐசிசி குழு வங்கதேசத்திற்குச் சென்றது. அதன்பிறகு, உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து விரைவான முடிவை எடுக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி கேட்டுக் கொண்டது.

bangladesh

மேலும், போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையையும் நிராகரித்தது. தவிர, ஜனவரி 21ஆம் தேதி வரை வங்கதேச அணிக்கு இதுகுறித்து முடிவெடுக்க அவகாசம் அளித்துள்ளதாகவும், ஒருவேளை அவ்வணி விளையாட சம்மதிக்காவிட்டால், டி20 உலகக் கோப்பையில் அதற்குப் பதில் வேறு அணி சேர்க்கப்படும் எனவும் அது எச்சரித்திருந்தது. ஆனால், ”பிசிசிஐயின் அழுத்தத்திற்குட்பட்டு ஐசிசி நிபந்தனைகள் விதித்தால் அதற்கு உடன்படமாட்டோம்” எனப் பதிலளித்திருந்தது.

இந்த நிலையில், ஐசிசி கொடுடுத்த கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி வாரியம் நிராகரித்துள்ளதாகவும், இந்த திட்டம் வாரிய வாக்கெடுப்பில் 14-2 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கலந்து கொண்ட 15 இயக்குநர்களில், பிசிபி மட்டுமே பிசிபி மற்றும் பாகிஸ்தான் மட்டுமே ஆதரித்ததாகத் தெரிகிறது. தவிர, இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு, ஐசிசி பங்களாதேஷ் அரசாங்கத்திற்கு முறையாக முடிவு குறித்து தெரிவிக்குமாறு அதன் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

icc, bcb

மேலும், பங்களாதேஷ் பயணம் செய்ய விரும்பவில்லை என்றால், அது போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியால் மாற்றப்படும் என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தனது இறுதி நிலைப்பாட்டை தெரிவிக்க ஐசிசி இன்னும் ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது. வங்கதேசம் வெளியேறினால், ஸ்காட்லாந்து அவர்களுக்குப் பதிலாக குரூப் சி-யில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஐரோப்பிய தகுதிச் சுற்றில் நெதர்லாந்து, இத்தாலி மற்றும் ஜெர்சி அணிகளுக்குப் பின்னால் வந்த பிறகு, ஸ்காட்லாந்து 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் தவறிவிட்டது, ஆனால் இப்போது தாமதமாகப் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.