2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுழற்சி அட்டவணை துவங்கிவிட்டது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியையும், பெண்களுக்கான சிறந்த ஒருநாள் அணியையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் அணியில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் முதலிய 4 அணி வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு இலங்கையின் சரித் அசலங்கா கேப்டனாக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் முதலிய நாடுகள் 2024-ல் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், அதிலிருந்து ஒரு வீரர்கள் கூட இடம்பெறவில்லை.
இந்திய அணியை பொறுத்தவரை 2024-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது, இதில் ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யவில்லை.
2024 ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி:
சயிம் அயூப், ரஹ்மனுல்லா குர்பாஸ், பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (WK), சரித் அசலங்கா (C), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அஸ்மத்துல்லா ஓமர்சாய், வனிந்து ஹசரங்கா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ராஃப், ஏஎம் கசன்ஃபர்
2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் அணியை பொறுத்தவரையில், இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா மற்றும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் இருந்து இடம்பிடித்துள்ளார்.
2024 ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித் (WK), ரவீந்திர ஜடேஜா, பாட் கம்மின்ஸ் (C), மாட் ஹென்றி, ஜஸ்பிரிட் பும்ரா
2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் மகளிர் ஒருநாள் அணியில் இந்தியாவிலிருந்து தொடக்க வீரர் ஸ்மிரிதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா இருவரின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
2024 ஐசிசி பெண்கள் ஒருநாள் அணி:
ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (சி), சாமர்த்தி அதபத்து, ஹேலி மேத்யூஸ், மரிசான் கேப், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், எமி ஜோன்ஸ் (WK), தீப்தி ஷர்மா, சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.