ஸ்ரேயாஸ் ஐயர் - சவுரவ் கங்குலி web
கிரிக்கெட்

”ஸ்ரேயாஸ் இல்லாத ஒரு வெள்ளை பந்து அணி இருக்க முடியாது..” - சவுரவ் கங்குலி

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

Rishan Vengai

  • ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்காத ஸ்ரேயாஸ் ஐயர்

  • வெள்ளை பந்து அணியில் ஸ்ரேயாஸ் இருக்க வேண்டும்

  • ஸ்ரேயாஸ் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக கங்குலி கருத்து

2025 ஆசியக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி விளையாடுகிறது. இந்த அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது தொடர்ந்து விமர்சனத்தை பெற்றுவருகிறது.

ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய போதும், இந்திய அணிக்காக தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியபோதும் ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

ஸ்ரேயாஸ் ஐயர்

அந்தவகையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஸ்ரேயாஸ் இல்லாத வெள்ளை பந்து அணி அர்த்தமற்றது..

இந்திய டி20 அணியின் தேர்வில் ஐபிஎல் தொடர் பிரதான பங்குவகிக்கும் நிலையில், 2024-ல் ஐபிஎல் கோப்பை வென்றவரும், 2025-ல் ஐபிஎல் இறுதிப்போட்டிவரையும் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது பெரிய பேசுபொருளாக மாறியது.

ரவிச்சந்திரன் அஸ்வின், இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதை விமர்சித்திருந்த நிலையில், தற்போது சவுரவ் கங்குலியும் விமர்சித்துள்ளார்.

கங்குலி

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் கங்குலி, “ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸை பார்க்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வெள்ளை பந்து அணியில் அவரைப் பார்க்காத போதெல்லாம், நான் அதிர்ச்சியடைகிறேன். அவர் ஐபிஎல்லில் அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார், மேலும் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்துள்ளார்.

வெள்ளை பந்து அணிகளில் இருந்து ஸ்ரேயாஸை நீக்க முடியாது. ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மாவை விட அவர் ஒரு இடத்திற்கு முன்னேற தகுதியானவர். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருக்கிறார், அப்படியென்றால் ஏன் ஸ்ரேயாஸ் ஐயரை இன்னும் சேர்த்துக் கொள்ளக்கூடாது?” என்று கங்குலி கேள்வி எழுப்பினார்.