karun nair - sai sudharsan - ganguly web
கிரிக்கெட்

’சுதர்சன், கருண் நாயர் இருவருமே வேண்டாம்.. 3வது வீரராக அவர்மீது நம்பிக்கை வையுங்கள்!’ - கங்குலி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் 3வது வீரருக்கான இடம் மட்டுமே பலவீனமாக இருந்ததாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஒரு வீரருக்கு மட்டுமே ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இங்கிலாந்து தொடரின் போது, கேப்டன் சுப்மன் கில் விராட் கோலியின் ஓய்வுக்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப 4வது இடத்திற்கு மாறினார். அங்கு அபாரமாக செயல்பட்ட அவர், விராட் கோலியின் வெற்றிடத்தை நிரம்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சாய் சுதர்சன் - கவுதம் கம்பீர்

ஆனால் 3வது வீரருக்கான இடம் இன்னும் வெற்றிடமாகவே இருந்துவருகிறது. சட்டீஸ்வர் புஜாராவுக்கான மாற்றுவீரர் இன்னும் இந்திய அணிக்கு சோதனையாகவே இருந்துவருகின்றனர். இந்த தொடரில் 3வது இடத்தில் கருண் நாயர், சாய் சுதர்சன் என்ற இரண்டு விருப்பங்களை இந்தியாசோதித்தது. ஆனால் இரண்டு பேருமே ஈர்க்கப்படவில்லை.

சுதர்சன் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி 23.33 சராசரியில் 140 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் நான்கு இன்னிங்ஸ்களில் 27.75 சராசரியில் 111 ரன்கள் எடுத்தார். இருவரும் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தனர்.

கருண் நாயர்

இந்த சூழலில் இங்கிலாந்து தொடரில் இந்தியாவிற்கு 3வது வீரருக்கான இடம்மட்டுமே பலவீனமாக இருந்ததாக கூறியிருக்கும் கங்குலி, அந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்காத அபிமன்யு ஈஸ்வரனை தேர்வுசெய்தார்.

சுதர்சன், கருண் நாயர் இருவருமே வேண்டாம்..

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, "அவருக்கு (அபிமன்யு ஈஸ்வரன்) வயது (29) அதிகம்தான். ஆனால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த தொடரில் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கில், ரிஷப் பண்ட், ஜடேஜா போன்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள். ஆனால் 3-வது பேட்டிங் வரிசை மட்டுமே பலவீனமாக தெரிந்தது. அந்த இடத்தில் ஈஸ்வரனை அங்கே களமிறக்கலாம்" என்று கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர் - அபிமன்யு ஈஸ்வரன்

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் 7 வருடமாக காத்திருக்கும் அபிமன்யுவின் தந்தை சமீபத்தில் பேசும்போது, “கௌதம் கம்பீர், என் மகனிடம் பேசியபோது, 'பார், நீ சரியான விஷயங்களைச் செய்கிறாய். உனக்கான வாய்ப்பு நிச்சயம் உனக்கு கிடைக்கும். உனக்கான முறையில் நீண்ட வாய்ப்பு கிடைக்கும். 'ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்குப் பிறகு உன்னை வெளியே தள்ளுபவன் நான் அல்ல. நான் உனக்கு ஒரு நீண்ட கயிற்றைக் கொடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார். முழு பயிற்சிக் குழுவும் அவனுக்கு அவனது தகுதியைப் பெற வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளது. அவன் நீண்ட ஓட்டத்தைப் பெறுவான். அதுதான் நான் அவனைப்பற்றி சொல்லக்கூடிய சிறந்தது. என் மகன் 4 ஆண்டுகளாகக் காத்திருக்கிறான். அவன் 23 வருட கடின உழைப்பில் ஈடுபட்டுள்ளான்" என்று கூறியிருந்தார்.