india bowling bcci
கிரிக்கெட்

“இந்தியாவின் பவுலிங் கவலைக்கிடமாக உள்ளது..” முன்னாள் வீரர் கவலை!

இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் கவலை தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

இந்திய பவுலிங் பிரச்சனைகள் பும்ரா இல்லாததால் வெளிப்படையாக தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடர் வெற்றிகள் இந்திய பவுலர்களின் செயல்திறனை கேள்விக்குறியாக்கியுள்ளன. முன்னாள் வீரர் அஸ்வின், பவுலிங் நிலைத்தன்மை இல்லாமல் இருப்பது கவலைக்கிடமானது என தெரிவித்தார்.

இந்திய அணியில் எந்தளவு பந்துவீச்சில் பிரச்சனை இருக்கிறது என்பது, பும்ரா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் போனபிறகு தற்போது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக 3வது ஒருநாள் போட்டியில் 351 ரன்களை வெற்றிகரமாக சேஸ்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது டி20 போட்டியிலும் 250 ரன்களை 9 பந்துகள் மீதம் வைத்து சேஸ்செய்து மரண அடி கொடுத்துள்ளது.

problems in indian bowling

கிட்டத்தட்ட 501 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் ராஸ்டன் சேஸ் 4 ஓவரில் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் இந்திய அணியில் அனைத்து பவுலர்களும் 10-க்கு மேலான எகானமியுடன் பந்துவீசியிருந்தனர். ஒருவரால் கூட ரன்களை குறைவாக விட்டுக்கொடுக்கவோ, போட்டியை இழுத்துப்பிடிக்கவோ முடியவில்லை. இந்திய மண்ணில் ஒரு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளரால் செய்யமுடிந்ததை, ஒரு இந்திய பவுலரால் கூட செய்யமுடியவில்லை. இதன்மூலம் இந்தியாவின் பந்துவீச்சில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது என்பது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தசூழலில் தான் ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் என வெறும் 2 போட்டிகளில் இந்திய பவுலர்கள் 600 ரன்களை விட்டுக்கொடுத்த பிறகு பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாவின் பந்துவீச்சு கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “பந்துவீச்சாளர்கள் மனநிலை காப்பகம் ஒன்னு ஆரம்பிக்கணும் போல, ராஞ்சியில் இந்த அடிவாங்கிட்டு அடுத்து அவங்க போற இடம் இந்தூர். அங்க ஆடுகளங்கள் இன்னும் சிறியதாகவும், பனிப்பொழிவு அதிகமாகவும் இருக்கும்

அங்க போய் எப்படி ஷாய் ஹோப், ரூதர்போர்டு, ஷெபர்ட், பவல் போன்றவர்களுக்கு பந்துவீச முடியும் என்ற யோசனையுடன் இந்திய பவுலர்கள் செல்வார்கள். பும்ரா இல்லாமல் போனதின் மதிப்பு இப்போ பெரியதாக தெரிகிறது. உண்மையாக சொல்லப்போனால் இந்தியாவின் பந்துவீச்சு மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. விரைவில் சிறந்த பவுலர்களை இந்திய அணி கொண்டுவர வேண்டும்” என பேசியுள்ளார்.