கேஎல் ராகுல் - நிதிஷ்குமார் - கம்பீர் web
கிரிக்கெட்

IND vs AUS | பேட்டிங் ஆர்டரில் ஏன் இத்தனை குழப்பம்..? கம்பீரை விளாசும் நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் அடித்தது இந்திய அணி..

Rishan Vengai

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் அடித்தது இந்திய அணி..

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்து. கேப்டனாக கில் தன்னுடைய முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் தோல்வியை பதிவுசெய்தார்.

ind vs aus odi series

இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன..

பேட்டிங் ஆர்டரில் இருந்த குழப்பம்..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் 9 மற்றும் விராட் கோலி 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோகித் சர்மா தடுமாறினார். விக்கெட் இழப்பதற்கான பல வாய்ப்புகள் அவருக்கு சாதகமாக மாறின..

ரோகித் சர்மா

ஆனால் 3வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்தினர். இரண்டு பேரும் நல்ல டச்சில் தெரிய ரோகித் சர்மா 73 ரன்னிலும், 61 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதற்கு பிறகு பேட்டிங் ஆர்டரில் ஏற்பட்ட குழப்பத்தால் ரன்கள் அடிக்க போராடிய இந்திய அணி 50 ஓவரில் 264 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அக்சர் பட்டேல்

பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரையில் 5வது வீரராக கேஎல் ராகுலுக்கு பதிலாக அக்சர் பட்டேல் களமிறங்கினார். அக்சர் பட்டேல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதிலும், கேஎல் ராகுலால் சோபிக்க முடியவில்லை. அதேபோல கேஎல் ராகுல் வெளியேறிய பிறகு நிதிஷ்குமார் களமிறங்குவதற்கு பதிலாக வாசிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார்.

ரோகித் மற்றும் ஸ்ரேயாஸின் சிறப்பான பேட்டிங்கிற்கு பிறகு இந்தியா நல்ல டோட்டலை எட்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள், பேட்டிங் ஆர்டரில் ஏற்பட்ட குளறுபடியால் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சித்து வருகின்றனர்..