சோயிப் மாலிக் - சனா ஜாவேத் x page, insta
கிரிக்கெட்

மீண்டும் விவாகரத்து சர்ச்சையில் சோயிப் மாலிக்.. வைரலாகும் வீடியோ!

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயிப் மாலிக் தனது மூன்றாவது மனைவி நடிகை சனா ஜாவேத்தை விவாகரத்து செய்யவிருப்பதாகச் சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.

Prakash J

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயிப் மாலிக் தனது மூன்றாவது மனைவி நடிகை சனா ஜாவேத்தை விவாகரத்து செய்யவிருப்பதாகச் சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், சானியா மற்றும் சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜனவரியில் சோயிப் மாலிக், அந்நாட்டு நடிகை சனா ஜாவேத்தைத் திருமணம் செய்துகொண்டதாகப் புகைப்படத்துடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சோயிப் மாலிக் - சனா ஜாவேத்

இதையடுத்து, சானியா மிர்சாவை விவாகரத்து செய்யாமல் எப்படி, அவர் இன்னொரு திருமணம் செய்யலாம் என இணையத்தில் விவாதங்கள் நடைபெற்றன. இதற்கு, சானியா மற்றும் சோயிப் ஆகிய இருவரும் முன்னரே விவாகரத்து செய்துகொண்டதாக, சானியாவின் குடும்பத்தினர் தெளிவுபடுத்தினர். இதைத் தொடர்ந்து, சோயிப் மாலிக் - சனா ஜாவேத் திருமண வாழ்க்கை சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது அதிலும் விரிசல் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோயிப் மாலிக் தனது மூன்றாவது மனைவி நடிகை சனா ஜாவேத்தை விவாகரத்து செய்யவிருப்பதாகச் சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்வில் இருவரும் கலந்துகொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மாலிக் புன்னகைத்தபடி இருந்தாலும், சனா ஜாவேத் வருத்தத்துடனும், விலகியும் காணப்பட்டார்.

அந்த வீடியோவில், மாலிக் சிரித்தபடி பேட் ஒன்றில் கையெழுத்திடுகிறார். அவருக்கு அருகில் சற்று விலகி அமர்ந்திருக்கும் சனா, அவரைக் கொஞ்சம்கூட திரும்பிப் பார்க்காமல் உள்ளார். அவர்களின் இந்த இடைவெளி, உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் ரசிகர்களை ஊகிக்கத் தூண்டியுள்ளது. இந்த வீடியோவிற்குப் பிற்கு, #ShoaibSanaDivorce என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது. எனினும், இந்த வதந்திகள் குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. மாலிக்கின் கிரிக்கெட் வாழ்க்கையைப் போலவே, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருவது, ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.