சோயிப் மாலிக்
சோயிப் மாலிக்X

T20 போட்டியில் 3 No Ball வீசிய சோயிப் மாலிக்.. திருமணத்துடன் ஒப்பிட்டு டிரோல் செய்துவரும் ரசிகர்கள்!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை சமீபத்தில் விவாகரத்து செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், நடிகை சனா ஜாவேத்தைத் சமீபத்தில் திருமணம் முடித்தார்.

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நன்றாக சென்றுகொண்டிருந்த திருமண வாழ்க்கையில் சானியா மற்றும் சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் பரவின.

இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு சோயிப் மாலிக், அந்நாட்டு நடிகை சனா ஜாவேத்தைத் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியது. பல பாகிஸ்தான் ரசிகர்கள் கூட சானியா மிர்சாவுக்கு வருத்தம் தெரிவித்தும், சோயிப் மாலிக்கை விமர்சித்தும் எக்ஸ் தளங்களில் பதிவுகளை பதிவிட்டனர்.

சோயிப் மாலிக்
சோயிப் மாலிக்

சோயிப் மாலிக்கின் திருமண வாழ்க்கை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், தற்போது வங்கதேச டி20 லீக் போட்டியில் மோசமாக பந்துவீசிய வீடியோ வெளியாகி சோயிப் மாலிக் டிரோல் செய்யப்பட்டுவருகிறார்.

சோயிப் மாலிக்
“சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டனர்...” - சானியா மிர்சா குடும்பத்தினர் அறிக்கை

ஒரே ஓவரில் 3 No Ball! 18 ரன்களை வாரிவழங்கிய மாலிக்!

திருமணம் முடித்த கையுடன் வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாட வந்திருக்கும் சோயிப் மாலிக், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் அணிக்காக களமிறங்கினார். முதலில் விளையாடிய பார்ச்சூன் பாரிஷால் அணி 187 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவதாக விளையாடிய குல்னா டைகர்ஸ் அணி 188 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்தியது.

அப்போது குல்னா டைகர்ஸ் அணி 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்களுடன் இருந்த நிலையில், பார்ச்சூன் கேப்டன் தமீன் இக்பால் சோயிப் மாலிக்கின் கையில் பந்தை கொடுத்தார். ஆனால் கேப்டனின் நம்பிக்கைக்கு ஏற்றுவாறு பந்துவீசாத சோயிப் மாலிக், ஒரே ஓவரில் 3 நோ-பால்களை வீசி 18 ரன்களை வாரிவழங்கினார். இதனால் 4 ஓவரில் குல்னா டைகர்ஸ் அணி 50 ரன்களை கடந்தது. இந்நிலையில்தான் சோயிப் மாலிக்கின் இந்த மோசமான செயல்பாட்டை பகிர்ந்து ரசிகர்கள் டிரோல் செய்துவருகின்றனர். இருப்பினும் சமீபத்தில்தான் டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்த முதல் ஆசிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார் சோயிப் மாலிக்.

சோயிப் மாலிக்
BCCI விருதுகள்: 85வயது பரோக் இன்ஜினியர், ரவி சாஸ்திரி 2 பேருக்கும் வாழ்நாள் சாதனயாளர் விருது!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com