டெவால்ட் பிரேவிஸ் web
கிரிக்கெட்

CSK vs DC| டெவால்ட் பிரேவிஸ் IN.. குர்ஜப்னீத்துக்கு வாய்ப்பு! வலுவான அணியை இறக்கிய சிஎஸ்கே!

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ் களமிறங்குகிறார்.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் இன்னும் புள்ளி எதுவும் பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ், ஏலத் தவறுகள் மற்றும் டெத் பவுலர், ஃபினிஷர் பேக்கப் இல்லாமை குற்றச்சாட்டுகளால் சிக்கலில் உள்ளது. இந்நிலையில் சேப்பாக்கில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் இழந்தாலும், டெவால்ட் பிரேவிஸ், குர்ஜப்னீத் சிங் ஆகியோரை பிளேயிங் 11-ல் சேர்த்து முதல் வெற்றியை நோக்கி ருதுராஜ் அணி களமிறங்குகிறது.

2026 ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளில் 9 அணியும் புள்ளிகளை பெற்றுவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இன்னும் ஒரு புள்ளியை கூட பெறவில்லை. இதற்கு சென்னை அணி ஏலத்திலேயே வீரர்களை தேர்வுசெய்ததில் கோட்டைவிட்டுவிட்டது எனவும், டெத் பவுலர், ஃபினிசர்களுக்கு பேக்கப் வீரர்களை இல்லை எனவும் பல்வேறு குறைகள் சொல்லப்படுகின்றன.

டெவால்ட் பிரேவிஸ்

எல்லாம் ஒருபுறம் இருக்க நட்சத்திர வீரர் டெவால்ட் பிரேவிஸ், மகேந்திர சிங் தோனி போன்றவர்கள் அணிக்குள் வந்துவிட்டால் இருக்கும் பிரச்னைகள் சரிசெய்யப்படும் என்றும் மறுபக்கம் சொல்லப்பட்டது.

இந்தசூழலில் தான் தொடர்ந்து 3 தோல்விக்கு பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்றைய போட்டியில் அதிரடி வீரர் டெவால்ட் பிரேவிஸ் பிளேயிங் 11-ல் இடம்பெற்றுள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு முதல் வெற்றியை தேடித்தெரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். தொடர்ந்து டாஸை இழக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்தமுறையும் அதிர்ஷ்டம் கைக்கூடவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் இரண்டு மாற்றங்களாக டெவால்ட் பிரேவிஸ், குர்ஜப்னீத் சிங் முதலியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): சஞ்சு சாம்சன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரேவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், கலீல் அகமது