ருதுராஜ் கெய்க்வாட் cricinfo
கிரிக்கெட்

மும்பைக்கு எதிராக புதிய வரலாறு படைத்த CSK.. 4 மிரட்டல் சம்பவம்!

மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றியை ருசித்தது.

Rishan Vengai

சென்னையில் நடந்த ஐபிஎல் மோதலில் மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, மும்பைக்கு எதிராக 20 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாறு படைத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 67, 20 வயது கார்த்திக் சர்மா 54 ரன்கள் குவித்து இலக்கை 18.1 ஓவர்களில் எளிதில் அடைந்தனர். இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை 6வது இடத்துக்கு உயர்த்தியது.

சென்னையில் நடைபெற்ற பரபரப்பான IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி CSK அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், IPL வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

இந்த வெற்றி CSK அணியின் நட்சத்திர பட்டியலில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், இளம் வீரர் கார்த்திக் சர்மா 54 ரன்களும் குவித்து, இருவரும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தனர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

CSK, 2026

இந்த வெற்றியானது சென்னை ரசிகர்களுக்கு முன்னிலையில் கிடைத்ததோடு, சென்னை சூப்பர் கிங்ஸை மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 20 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக நிலைநிறுத்தியது. இதுவரை இரு அணிகளும் மொத்தமாக 41 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 வெற்றிகளையும், மும்பை இந்தியன்ஸ் கடந்த 18 ஆண்டுகளில் 21 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

சிஎஸ்கே மிரட்டல் சாதனை!

CSK அணிக்கு எதிராக மும்பை அணி எப்போதுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில், கடைசி 8 போட்டிகளில் சிஎஸ்கே அணி 7 ஆட்டங்களில் வென்று பதிலடி தந்துள்ளது. IPL வரலாற்றில், எந்தவொரு அணிக்கும் எதிராக ஒரு குறிப்பிட்ட அணி 20 வெற்றிகளைப் பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சாதனை முக்கியத்துவம் பெறுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட்

டெல்லி கேப்பிடல்ஸ் (17 வெற்றிகள்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (17 வெற்றிகள்) போன்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் சென்னை அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் CSK அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடிக்க, மும்பை அணி தொடரை விட்டு முதல் அணியாக வெளியேறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் சேப்பாக் மற்றும் வான்கடே என விளையாடிய இரண்டிலும் சென்னை அணி வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

ருதுராஜ் கெய்க்வாட்

மேலும், Playoffsகுள் செல்ல டெல்லி, சென்னை, குஜராத் போன்ற அணிகள் கடுமையாக விளையாடி வருகிறது. அதே போன்று முதல் இரண்டு இடத்தை பிடிக்கவும் புள்ளிபட்டியலில் இருக்கும் முதல் 4 அணிகளும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

4 மிரட்டல் சம்பவங்கள்..

MI-க்கு எதிராக பெரிய வெற்றி

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை சென்னை அணி வீழ்த்தியதே, விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்

3வது முறை

ஐபிஎல் லீக் போட்டிகளில் இரண்டிலுமே மும்பையை சிஎஸ்கே வீழ்த்துவது இது 3வது முறை. இதற்கு முன் 2014 மற்றும் 2023 ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்றிருந்தது சிஎஸ்கே.

ராமகிருஷ்ண கோஷ்

கார்த்திக் சர்மா

ஐபிஎல்லில் இளம் வயதில் அரைசதமடித்த 2வது சிஎஸ்கே வீரரானார் 20 வயது கார்த்திக் சர்மா. 19 வயதில் ஆயுஷ் மாத்ரே முதலிடத்தில் இருக்கிறார்.

சிஎஸ்கே ஆதிக்கம்

2023 ஐபில் தொடரிலிருந்து கடைசியாக நடந்த 7 மோதலில் 6 போட்டிகளில் மும்பையை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.