பும்ரா - அஸ்வின் web
கிரிக்கெட்

900-ஐ கடந்த டெஸ்ட் பவுலிங் ரேட்டிங்.. அஸ்வினின் வரலாற்று சாதனையை சமன்செய்த பும்ரா!

ஐசிசி தரவரிசையில் டெஸ்ட் பவுலர்கள் வரிசையில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இது இந்திய பவுலராக அதிக டெஸ்ட் புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

Rishan Vengai

இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய பவுலராக அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

bumrah

இதன்படி இதுவரை ஒரு இந்திய பவுலர் வைத்திருந்த அதிகபட்ச புள்ளிமதிப்பீடான அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அஸ்வினின் ஆல்டைம் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

904 புள்ளிகள் பெற்று அஸ்வின் சாதனை சமன்..

தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் செய்யப்பட்ட அப்டேட்டின் படி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா, தரவரிசை பட்டியலில் 14 புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார்.

பும்ரா

இதன்மூலம் 2016-ம் ஆண்டு அதிக டெஸ்ட் புள்ளிகளை பெற்ற ஒரு இந்திய பவுலராக அஸ்வின் பதிவுசெய்த 904 புள்ளிகள் என்ற சாதனையை, ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார்.

ஐசிசி தரவரிசையில் பவுலராக அதிக புள்ளிகள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து பவுலர்கள் சிட்னி பார்ன்ஸ், ஜார்ஜ் லோமன், இம்ரான் கான், முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ராத் முதலிய ஜாம்பவான் பவுலர்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர்.

அஸ்வின்

ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற பவுலர்கள்:

1. சிட்னி பார்ன்ஸ் - 932 புள்ளிகள் - இங்கிலாந்து - 1914

2. ஜார்ஜ் லோமன் - 931 புள்ளிகள் - இங்கிலாந்து - 1896

3. இம்ரான் கான் - 922 புள்ளிகள் - பாகிஸ்தான் - 1983

4. முத்தையா முரளிதரன் - 920 புள்ளிகள் - இலங்கை - 2007

5. க்ளென் மெக்ராத் - 914 புள்ளிகள் - ஆஸ்திரேலியா - 2001

6. பாட் கம்மின்ஸ் - 914 புள்ளிகள் - ஆஸ்திரேலியா - 2019

ஜடேஜா

இந்திய வீரர்கள் அதிக புள்ளிகள்:

19வது இடத்தில் 904 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின், 20வது இடத்தில் 904 புள்ளிகளுடன் ஜஸ்பிரித் பும்ரா, 26வது இடத்தில் 899 புள்ளிகளுடன் ஜடேஜா முதலியோர் நீடிக்கின்றனர்.