டேமியன் மார்ட்டின் web
கிரிக்கெட்

கோமாவிலிருந்து கண்விழித்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் மார்ட்டின்.. உறுதிசெய்த கில்கிறிஸ்ட்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் கவலைக்கிடமான நிலையில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமாவிற்கு சென்றநிலையில் தற்போது மீண்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் கோமாவிலிருந்து மீண்டுவந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில், தற்போது அவர் குடும்பத்தினருடன் பேசுகிறார். இந்த தகவலை முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் உறுதிசெய்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மார்ட்டின்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின். 54 வயதான மார்ட்டின் சமீபத்திய நாள்களில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரிஸ்பேனில் உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் கோமாவில் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மார்ட்டின்

1999 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா அணியிலும், 2006 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் டேமியன் மார்ட்டின் இடம்பெற்றிருந்தார். மேலும் 46 சராசரியுடன் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக ஜொலித்தார் மார்ட்டின்

டேமியன் மார்ட்டினின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் இருந்தநிலையில், தற்போது அவர் கோமாவிலிருந்து மீண்டுவந்துவிட்டதாகவும், குடும்பத்தினருடன் பேசுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் உறுதிசெய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மார்ட்டின் கோமாவிலிருந்து மீண்டுவிட்டதாக தெரிவித்திருக்கும் கில்கிறிஸ்ட், மார்ட்டினால் இப்போது பேசவும், சிகிச்சைக்கு பதிலளிக்கவும் முடிகிறது. அவர் கோமாவிலிருந்து வெளியே வந்து, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பது, அவரது குடும்பத்தினருக்கு ஒருவித அதிசயம் போல இருக்கிறது" என்று கில்கிறிஸ்ட் கோட் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.