அக்சர் பட்டேல் - அஸ்வின் web
கிரிக்கெட்

"இந்தியாவின் தரமான புராடக்ட் அக்சர் பட்டேல்.." - அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் தரமான புராடக்ட் அக்சர் பட்டேல் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்..

Rishan Vengai

இந்திய அணியின் தரமான புராடக்ட் அக்சர் பட்டேல் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்..

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ளது. நடந்து முடிந்துள்ள 2 போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா பரிதாபமாக தோற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

இந்த சூழலில் ஒருபக்கம் தோல்வியிருந்தாலும், மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான பேட்டிங், அக்சர் பட்டேலின் தைரியமான பேட்டிங் மற்றும் ஹர்சித் ராணாவின் கடைசிநேர பேட்டிங் அனைத்தும் பாசிட்டிவாக அமைந்துள்ளது.

அக்சர் பட்டேலுக்கு அஸ்வின் புகழாரம்..

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் அணியில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அக்சர் பட்டேல் ஒரு முழுமையான பேட்ஸ்மேனை போல பேட்டிங் செய்ததாக புகழாரம் சூட்டினார்..

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேலை புகழ்ந்த அஸ்வின், "இந்திய அணி உருவாக்கியதிலேயே தரமான புராடக்ட் என்றால் அது அக்சர் பட்டேல் தான்.. ஒரு முழுமையான பேட்ஸ்மேனை போல் பேட்டிங் செய்கிறார். விராட் கோலி அவுட்டான விதம் ஆச்சரியமாக இருந்தாலும், அவர் டச்சில் இல்லாதது நம்மாள் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதேவேளையில் விராட் கோலி என்ன செய்திருக்க வேண்டுமோ அதை அக்சர் பட்டேல் தன்னுடைய பேட்டிங்கில் வெளிப்படுத்தினார். அவர் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு முழுமையான பேட்ஸ்மேனை போல உடம்பு, தலை, கை மற்றும் கால்களுடன், உடல் எடையையும் சரியான விகிதத்தில் கொண்டுவந்து பேட்டிங் செய்கிறார். அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது அற்புதமாக இருந்தது" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.