2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்ட்டை விரைவாக வீழ்த்தினால் இந்தியா வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு இது முதல் கோப்பை வெற்றிக்கான வாய்ப்பு.
2025 மகளிர் உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளன..
இந்தசூழலில் நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையே வெல்லாத இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் முதல் கோப்பைக்காக மோதவிருக்கின்றன..
இந்நிலையில் லீக் போட்டியில் இந்தியாவை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருந்தாலும், ஒரு வீராங்கனையின் விக்கெட்டை விரைவாகவே எடுத்துவிட்டால் இந்தியா வெற்றிபெற்றுவிடும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்..
இந்திய மகளிர் அணிக்கு இருக்கும் கட்டமைப்பில் பாதிகூட வசதியில்லாமல் தென்னப்பிரிக்கா அணி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. வலுவான குழுவாக களமிறங்கியிருக்கும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது இந்திய அணிக்கு நிச்சயம் சவாலான விசயமாகவே இருக்கப்போகிறது..
எப்படியிருப்பினும் தென்னாப்பிரிக்காவின் ஒரு வீராங்கனையை விரைவில் வீழ்த்திவிட்டாலே இந்தியா வென்றுவிடும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ”நல்ல ஃபார்மில் இருந்துவரும் தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்ட்டை விரைவாகே வீழ்த்திவிட்டால் போதும், இந்தியா உலகக்கோப்பையை வென்றுவிடும். அவரை மகளிர் ஐபிஎல் தொடரில் ஏன் எடுக்காமல் இருக்கிறார்கள் என புரியவில்லை” என்று பேசினார்..
மேலும் இந்தியாவின் இடதுகை ஸ்பின்னர் ஸ்ரீ சரணியை பாராட்டியுள்ளார் அஸ்வின்.. 2025 மகளிர் உலகக்கோப்பையில் 67 சராசரியுடன் 470 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீராங்கனையாக நீடிக்கிறார்.. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 169 ரன்கள் விளாசினார் லாரா வால்வார்ட்..