உத்தமர்கோவில்
உத்தமர்கோவில் Temple file image
கோயில்கள்

திவ்யதேசத்தில் மூன்றாவது திருத்தலம் ’உத்தமர் கோவில்’ பிச்சாண்டார் பெயருக்கான சுவாரஸ்யமான புராணக் கதை

Jayashree A

திவ்யதேசத்தில் மூன்றாவது திருத்தலமான உத்தமர் கோவில் வரலாறைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

”பேரானைக் குறுங்குடி எம்பெருமானை திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை” என்று திருமங்கை ஆழ்வார் இத்திருதலத்தை பற்றி பாசுரம் இயற்றி உள்ளார்.

இன்று உத்தமர் கோவில் அல்லது பிச்சாண்டார் கோவில் என அழைக்கப்படும் திருகரம்பனூர், ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது.

இத்திருதலத்தில் என்ன தனித்துவம் என்றால், இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தத்தம் தேவிகளுடன் காட்சி தருகின்றனர்.

இங்கு ஸ்தல விரிட்சமாக வாழைமரம் இருக்கிறது. இந்த வழைமரத்திற்கு ஒரு தனி கதையும் உண்டு.

மயிலாப்பூர் என்று பெயர் வருவதற்கு பின்னால் இப்படியொரு காரணமா.. சுவாரஸ்ய புராணக் கதை!!

வாழை மரத்தின் கதை..

ஒருமுறை பிரம்மனை சோதிப்பதற்காக பெருமாள் பூலோகத்திற்கு வந்து மாறுவேடத்தில் வாழை மரமாக மாறியுள்ளார். பிரம்மாவும் விஷ்ணு லோகத்தில் விஷ்ணுவை காணாதபடியால் அவரைத் தேடிக்கொண்டு பூலோகம் வந்தார். பூலோகத்தில் பிரம்மா விஷ்ணுவை அங்கும் தேடி, இங்கும் தேடி கடைசியாக கதளி மரமாக (வாழை) விஷ்ணு இருப்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்தார். விஷ்ணுவும் மகிழ்ந்து அவரை தன்னுடன் இருக்கும்மாறு கூறினார். அதனால் இத்தலத்தில் வாழை(கதளி) மரம் ஸ்தல விரிட்சமாக இருக்கிறது.

பிரம்மாவைப் போல் ருத்ரனுக்கும் இத்தலம் குறித்து புராணத்தில் ஒரு கதை உண்டு அது என்ன? என்பதை பார்க்கலாம்.

முன்பு ருத்ரனைப்போல் (சிவன்) பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாம். பிரம்மா அதனால் சற்றே கர்வமுடன் இருந்தாராம். ஒரு சமயம் பிரம்மாவின் மேல் அதீத கோபம் கொண்ட ருத்திரன் பிரம்மாவின் ஒரு தலையை தன் கைகளால் கிள்ளி எடுத்து விட்டார். ஆனால் பிரம்ம கபாலமானது ருத்திரன் கைகளில் ஒட்டிக்கொண்டு வர மறுத்து இருக்கிறது. கையில் பிரம்மனின் தலையுடனேயே ருத்திரர் பிட்சை எடுத்து வந்த சமயத்தில் இத்தலத்தில் இருக்கும் பூரணவல்லி தாயார், ருத்திரனுக்கு பிட்சையிட்டு இருக்கிறாள். தாயார் பிட்சையிட்ட அடுத்த வினாடி பிரம்மகபாலம் ருத்திரனின் கையிலிருந்து மறைந்ததாம். அதனால், ருத்திரனும் இத்தலத்தில் எழுத்தருளி இருக்கிறார். ருத்திரருக்கு தாயார் பிட்சை இட்டதால் இத்திருத்தலத்திற்கு பிச்சாண்டார் கோவில் என்னும் பெயரும் உண்டு. இவைகள் எல்லாம் புராணத்தில் கூறப்பட்ட கதைகள்.

எனினும் சிவனும், பெருமாளும் ஒரே ஸ்தலத்தில் காட்சி தருவது இத்திருதலத்தில் சிறப்புடையதாகும்.மேலும் கதம்பமுனிவருக்கு புருஷோத்தப்பெருமாளும் பூரணவல்லி தாயாரும் காட்சி அளித்ததால், கர(த)ம்பனூர் என்ற பெயரும் ஏற்பட்டதாம். இங்கு மும்மூர்த்தியும் தங்களது தேவிகளுடன் இருப்பதால் இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு மூவரின் ஆசிகளும் பரிபூரணமாக கிடைக்கும்.