
சென்னையின் முக்கியமான பாரம்பரியம் மிக்க பழமையான பகுதிகளில் ஒன்றுதான் “மயிலாப்பூர்”. இதனை மயிலை என்றும், திருமயிலை என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த மயிலாப்பூர் என்ற பெயர் வருவதற்கு பின்னால் சுவாரஸ்யமான புராணக் கதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிவபெருமான் பார்வதி தேவிக்கு பஞ்சாட்சரம் மகிமையை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அச்சமயம் பார்வதி தேவின் கவனமானது அங்கு அழகாக ஆடிக்கொண்டிருந்த மயில் மேல் இருந்தது. அதனால் சிவபெருமானின் உபதேசத்தை அவள் கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட ஈசன், பூளோகத்தில் மயிலாக பிறந்து தவம் இருந்து தன்னை வந்து அடையுமாறு பார்வதி தேவிக்கு கட்டளை பிறப்பித்தார். அதன்படி பார்வதி தேவி மயிலாக பிறந்து, தவம் இருந்து சிவபெருமானை அடைந்த இடம் தான் இந்த மயிலாப்பூர்.
”மயிலையே கயிலை, கயிலையே மயிலை” என்பார்கள் அதாவது சிவபெருமான் கைலையில் தான் இருப்பார். நம்மால் அவரை கைலையில் சென்று பார்க்க இயலாது. ஆனால் மயிலையில் பார்வதி தேவிக்காக இங்கு வந்ததால் நாம் கைலையில் தரிசிக்க வேண்டிய சிவபெருமானை மயிலையில் தரிசிக்கலாம் என்பதால் தான் இத்தகைய சொல் வந்தது.
எந்த ஒரு பாடல் பெற்ற சிவதலங்களிலும் நால்வர் சன்னதி இருக்கும். சில சிவ ஆலயங்களில் 63 நாயன்மார்கள் வீற்றிருப்பார்கள். இவர்களுக்கு அந்தந்த நட்சத்திரங்களில் அவர்களுக்கு பூஜை நடக்கும். ஆனால் 63 நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் நடக்கின்ற பூஜையானது மயிலாபூரில் மட்டுமே நடக்கிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் வீதி உலா குறித்து புதிய தலைமுறையின் நேரலை நிகழ்வில் பேசிய ஆன்மிக சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ, மயிலை பெயர் காரணம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க..