விஜயகாந்த் வியஸ்காந்த்
விஜயகாந்த் வியஸ்காந்த் ட்விட்டர்
இந்தியா

ஹசரங்காவுக்குப் பதில் மாற்று வீரர்; சர்ஃப்ரைஸ் கொடுத்த சன்ரைசர்ஸ்! யார் இந்த விஜயகாந்த் வியஸ்காந்த்?

Prakash J

10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, நடப்பு ஆண்டிலும் களைகட்டி வருகிறது. 10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதர அணிகளுடன் மல்லுக்கட்டி வருகிறது. சன்ரைசர்ஸ் அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி, 2இல் தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் நீடிக்கிறது.

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் அணி இன்று (ஏப்ரல் 9) 23வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக, இந்த அணியில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி வீரரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளார். இடது காலில் ஏற்பட்ட நாள்பட்ட வலி காரணமாக ஹசரங்கா நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை 1 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!

இந்த நிலையில், அவருக்குப் பதிலாக, அதே இலங்கை அணி வீரரை அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. அவருக்குப் பதிலாக 22 வயதான் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியஸ்காந்த் என்பவரை சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது. அடிப்படை தொகையான 50 லட்ச ரூபாய்க்கு விஜயகாந்த் வியஸ்காந்தை ஒப்பந்தம் செய்து உள்ளதாக சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த விஜயகாந்த் வியஸ்காந்த்?

கடந்த ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான இவர், ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார். அதேநேரத்தில் அவர் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காகவும், வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் சட்டோகிராம் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும், ஐஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதன்மூலமாக அவர் இதுவரை மொத்தமாக 33 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 42 விக்கெட்களை எடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ”பாஜகவில் போட்டியிடும் என் மகன் தோற்கவேண்டும்; காங். வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்” - ஏ.கே.அந்தோணி