முகநூல் மூலம் பழக்கமான ஃபர்மான் கானும் மோனலிசாவும் காதலிக்கத் தொடங்கினர். இந்தக் காதல் விவகாரம் மோனலிசாவின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வேறுவேறு மதத்தைச் சேர்ந்ததால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த காதல் ஜோடி, கேரளாவுக்குத் தஞ்சமடைந்து கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கேரள போலீஸில் தஞ்சமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசிமணி விற்கும் இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார். தவிர, அவர் பற்றிய செய்திகளும் அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலாகின. அவர் இதன்மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். ஒருகட்டத்தில், அவரைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். ’டைரீஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், முகநூல் மூலம் பழக்கமான ஃபர்மான் கானும் மோனலிசாவும் காதலிக்கத் தொடங்கினர். இந்தக் காதல் விவகாரம் மோனலிசாவின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வேறுவேறு மதத்தைச் சேர்ந்ததால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த காதல் ஜோடி, கேரளாவுக்குத் தஞ்சமடைந்து கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு கேரள போலீஸில் தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மோனலிசாவை தன் தந்தையுடன் அனுப்பிவைக்க முயற்சி செயதனர். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். எனினும், இந்தத் திருமணத்தை பலரும் 'லவ் ஜிகாத்' என்று விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்த தம்பதியினர் லவ் ஜிகாத் குற்றச்சாட்டை நிராகரித்தனர். இதுதொடர்பாக மோனலிசா, “எங்கள் திருமணம் இந்து சடங்குகளின்படி நடைபெற்றது. உண்மையைச் சொல்லப்போனால், அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. நான்தான் அவரை வற்புறுத்தினேன். என்னைத் திருமணம் செய்துகொள்ள அவரை கட்டாயப்படுத்தினேன். என் பெற்றோர் என் திருமணத்தை வேறொருவருடன் ஏற்பாடு செய்ய விரும்பினர். எனக்கு அந்த நபரைப் பிடிக்கவில்லை. என் அத்தையின் மகனை மணப்பது என்பது ஒரு சகோதரனை மணப்பதைக் குறிக்கும் என்பதால், நான் நிச்சயமாக அவரை மணக்க மாட்டேன் என்று முடிவு செய்தேன். நான் எல்லா மதங்களையும் ஒன்றாகவே கருதுகிறேன். அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அதுதான் என்னுடைய மதம்” என்றார்.
லவ் ஜிகாத் தொடர்பாக பேசிய அவரது கணவர் ஃபர்மான் கான், “நான் இந்து சடங்குகளின்படியே திருமணம் செய்துகொண்டேன். இங்கு மக்கள் கூறும் அனைத்து விஷயங்களும் லவ் ஜிஹாத் மற்றும் மோனலிசா இஸ்லாத்திற்கு மாறியது என எதுவும் உண்மை இல்லை. நான் இன்றும் முஸ்லிம் நம்பிக்கையைப் பின்பற்றுகிறேன். வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. நாங்கள் இருவரும் எங்கள் மதத்தை மாற்றவில்லை, நாங்கள் இருவரும் மதம் மாறவில்லை. நாங்கள் எங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுகிறோம். மோனலிசா ஓர் இந்து என்பதால் நான் அந்த மதச் சடங்குகளின்படியே திருமணம் செய்துகொண்டேன். மோனலிசா விரும்பியதை நான் ஏற்றுக்கொண்டேன். அவள் பரிந்துரைத்தபடியே எல்லா விஷயங்களையும் செய்தேன். ஏனென்றால் அவளுடைய மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம். காதலுக்கு மதமாற்றம் தேவையில்லை. காதல் விஷயங்களில், ஒருவர் மதம் மாறவேண்டிய அவசியமில்லை. எல்லா மதங்களும் சமம்" என விளக்கமளித்தார்.