pt web pt web
இந்தியா

இந்தியாவின் டாப் 10 பணக்கார யூடியூபர்கள்.. பட்டியலில் யார் யார்?

சமீபத்தில் வெளியான பணக்கார இந்திய யூடியூபர்கள் பட்டியலில் உள்ள சிலரின் நிகர சொத்து மதிப்பு, முன்னணி நடிகர்களின் வருமானத்தையே விஞ்சும் அளவுக்கு பிரமிக்க வைத்துள்ளது.

PT WEB

சினிமாவுல ஒரு படத்துக்கு கோடிகள்ல சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு இனிமேல் ஒரு டஃப் காம்படீஷன்தான்... ஏன்னா.. வெறும் கேமரா முன்னாடி உட்கார்ந்து பேசுறது, காமெடி பண்றதுன்னு, சினிமா நட்சத்திரங்களைவிட பலமடங்கு காசுக்காரர்களா ஆகியிருக்காங்க கன்டென்ட் கிரியேட்டர்களான யூடியூபர்ஸ்... சமீபத்தில வெளியான பணக்கார இந்திய யூடியூபர்ஸ் லிஸ்ட்ல இருக்கற சிலரோட நிகர சொத்து மதிப்பு, முன்னணி நடிகர்களோட வருமானத்தையே விஞ்சும் அளவுக்கு பிரமிக்க வச்சிருக்கு..

தன்மய் பட்

காமெடியில இருந்து கேமிங், போட்காஸ்ட்னு எல்லாத்துலயும் கலக்கும் தன்மய் பட்தான் இந்தியாவோட டாப் 10 பணக்கார யூடியூபர்கள்ல, முதலிடத்து-ல இருக்கார்... இவர் சம்பாதிச்ச மொத்த சொத்து மதிப்பு சுமார் 665 கோடியாம்... இது பல முன்னணி ஹீரோக்களோட ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட ரொம்ப ஜாஸ்தினு சொல்றாங்க... ஒரு வீடியோ போட்டாலே, பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை விட அதிக வியூஸ் பாக்குறவருன்னா சும்மாவா?

அடுத்து, டெக்னாலஜில ஒரு பி.ஹெச்.டி- யே வாங்கலாம்னு பேசுற டெக்னிக்கல் குருஜி கெளரவ் செளத்ரி தான் இரண்டாவது... இவரோட சொத்து மதிப்பு சுமார் 356 கோடி... டெக் ரிவ்யூ மட்டுமில்லாம, துபாயில செக்யூரிட்டி கம்பெனி வேற வெச்சிருக்காராம். இவரு போட்ட ஒரு கேட்ஜெட் ரிவ்யூவுக்கு வர்ற காசு, ஒரு சினிமா பாட்டுக்கு செலவு பண்றதைவிட அதிகம்.

3ஆவது இடத்துல இருக்கறது சமய் ரெய்னா.. செஸ் விளையாட்டையும் காமெடியையும் மிக்ஸ் பண்ணி, புது ரூட் பிடிச்சிருக்காரு.. இவர் அக்கவுன்ட்ல 140 கோடி இருக்குன்னு சொல்றாங்க... சும்மா செஸ்ஸை நகர்த்தியே கோடிகளை நகர்த்தியிருக்கார்.

கெளரவ் செளத்ரி (இடது படம்), சமய் ரெய்னா (வலது படம்)

இதேபோல, கேரிமினாட்டி ரூ. 131 கோடி, புவன் பாம் ரூ.122 கோடி, நிஷ்சாய் மல்ஹன் ரூ.65 கோடி என எல்லாரும் யூடியூப் மூலமாக கோடிகள்ல சம்பாதிக்கறாங்க... சினிமா நடிகர்கள் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நம்பி இருக்கும்போது, இந்த யூடியூப் ராஜாக்கள், தங்களோட அறையில இருந்தபடியே, உலகம் முழுதும் ரசிகர்களைக் கவர்ந்து, விளம்பரங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், லைவ் ஸ்ட்ரீமிங் மூலமா, கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டி, டிஜிட்டல் உலகத்தோட பாக்ஸ் ஆஃபீஸ் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தியிருக்காங்க.. கதை, திரைக்கதை எல்லாம் வேண்டாம், தரமான கன்டென்ட் ஒண்ணு இருந்தா போதும், சினிமாவுக்கு வர்ற லாபத்தைவிட, யூடியூப்ல ஏகப்பட்ட லாபத்தைப் பார்க்கமுடியும்னு நிரூபிச்சிருக்காங்க..

என்ன மக்களே யூடியூப் சேனல் தொடங்கலாமா...