சென்னை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. ஈரோட்டில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது..
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்துரைப்பதற்காக வெளிநாடு சென்று திரும்பிய எம்.பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். ஒவ்வொருவரின் பணியை எண்ணி பெருமை கொள்வதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தமிழகத்துக்கான நிதியை ஒதுக்குங்கள் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஃபால்கான் 9 ராக்கெட்... சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டம்...
இந்தியாவிற்கே தலைமையாக தமிழ்நாடு திகழ்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் உலக வங்கி மிகப்பெரிய பங்கு வகிப்பதாகவும் புகழாரம்...
2026 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.... திமுக தலைமைக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்....
கீழடி அறிக்கை அறிவியல்பூர்வமாக, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது.... அமர்நாத் அறிக்கையை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்....
மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்காதது குறித்த புதிய தலைமுறை செய்தியை சுட்டிக்காட்டிய அமைச்சர்...
வைகாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்... நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்...
ஏ.சியில் 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வெப்பநிலையை வைக்க வருகிறதா கட்டுப்பாடு?... மின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு புதிய திட்டம்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்... ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை...
காசாவில் உணவு விநியோக மையத்தின் அருகே துப்பாக்கிச்சூடு... இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு...
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ட்ரோன் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு... குடியிருப்பு பகுதிகள் சேதம்...