வங்கக்கடலில் புயல் உருவாவதில் தொடரும் தாமதம்.ஆறு மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்கக்கடலில்12 மணி நேரத்தில் உருவாகிறது ஃபெங்கல் புயல் 30ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிப்பு.
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை எச்சரிக்கை காரணமாக அறிவிப்பு.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. புதுச்சேரிக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்.
சென்னை, திருவள்ளூர் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு.
தரங்கம்பாடியில் விளைநிலங்களை மூழ்கடித்த உப்புநீர். இதற்கு, கரைகளை சீரமைக்காததே காரணம் என விவசாயிகள் வேதனை.
கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் மூன்றாவது நாளாக ஒத்திவைப்பு. மேலும், தேர்வுக்குரிய மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிப்பு.
அதீத மழையால் தத்தளிக்கும் இலங்கை. விளைநிலங்கள் மூழ்கிய நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.. சமூக நீதி அடிப்படையில் கைவினை கலைஞர்களுக்கென விரிவான புதிய திட்டத்தை வகுத்திருப்பதாக மத்திய அமைச்சருக்கு கடிதம்.
முதலமைச்சரை போன்று பிரகாசமான அரசியல் ஞான ஒளி எனக்கு கிடைக்கவில்லை. வேறு வேலையில்லாததால் அறிக்கை விடுவதாக மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, ராமதாஸ் பதில்.
ரஜினிகாந்த் திரையுலக சூப்பர் ஸ்டார், நாங்கள் அரசியல் சூப்பர் ஸ்டார் என சீமான் பேச்சு. இரண்டு ஸ்டார்களும் இணைந்ததால் பயந்துவிட்டார்கள் என்றும் விமர்சனம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
மாமல்லபுரம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் 5 பெண்கள் உயிரிழப்பு. பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.
ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன். ராகுல், உதயநிதி, மம்தா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு.
மகாராஷ்டிரா முதல்வர் தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் எனவும் முதல்வர் பதவியை தான் விரும்பவில்லை என்று ஏக்நாத் ஷிண்டே பேட்டி.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு.
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர். சமரச தீர்வு மையத்தில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விசாரணை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி. உலக சாம்பியன் டிங் லீரனை வீழ்த்தி அபாரம்.