அல்லு அர்ஜுன், வினோத் காம்ப்ளி pt web
இந்தியா

Headlines: சம்மன் பெற்ற அல்லு அர்ஜுன் முதல் மூளை ரத்த உறைவால் பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளி வரை

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்களின் தகவல் முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு வரையிலான முக்கியச் செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

வன்முறையை பரப்பி சமூகத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கும் போது மனம் வேதனை அடைகிறது என டெல்லியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை இந்தியாவை, ஒற்றை இந்தியாவாக மாற்ற பாஜக துடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சமத்துவத்தை பேணி காக்க இந்தியர் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவின் முயற்சியை தடுப்பார்கள் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

model image

5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி எனும் நடைமுறையை ரத்து செய்கிறது மத்திய கல்வி அமைச்சகம்... தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத இரண்டு மாதங்களுக்குள் வாய்ப்பு தர வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். ஏழை குழந்தைகள் தடையின்றி 8ஆம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் தடைக்கல்லை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் - விம்கோ நகர் நிலையங்கள் இடையே 18 நிமிடங்களுக்கு ஒரு முறையே ரயில்கள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு நாட்களாக நடைபெற்ற கழிவுகளை அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது.

மருத்துவக் கழிவுகள்

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டியது ஏன் என கேரள உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் குறித்து அறிக்கை அளிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநில கழிவுகளை கொட்டுவோருக்கு உதவினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கால்வாயில் மூழ்கி சகோதரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீன் பிடிக்க சென்ற போது சோகம்...

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக் கூட்டத் தொடரில் அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்...

கர்நாடக மாநிலம் உடுப்பியில் காற்று நிரப்பும்போது திடீரென வெடித்த டயர்.... விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயம்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது ஹைதராபாத் காவல் துறை. திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் இன்று ஆஜராக உத்தரவு.

அல்லு அர்ஜூன்

பிரபல இயக்குநர் ஷ்யாம் பெனகல் காலமானார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது. பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஹசீனாவிடம் விசாரிக்க திட்டம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு உடற்தகுதி பெறாததால் பறிபோன வாய்ப்பு.

வினோத் காம்ப்ளி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.