இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
இந்தியா

Headlines | முடிவுக்கு வருமா ராமதாஸ் - அன்புமணி மோதல் To பெரு கடற்பகுதியில் எழுந்த ராட்சத அலைகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, முடிவுக்கு வருமா ராமதாஸ் - அன்புமணி மோதல் என்பது முதல் பெரு கடற்பகுதியில் எழுந்த ராட்சத அலைகள் வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.

  • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு.

  • புத்தாண்டையொட்டி சென்னையில் வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்த காவல் துறை முடிவு. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை.

  • பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தனை ராமதாஸ் அறிவித்ததற்கு பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு. இந்நிலையில், கட்சியில் தனது பேச்சை கேட்காதவர்கள் விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் ஆவேசம்.

அன்புமணி, ராமதாஸ்
  • ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல்போக்கு முடிவுக்கு வருமா ? என இருவரையும் மீண்டும் சந்திக்கச் செய்து சமரசம் ஏற்படுத்த பாமக நிர்வாகிகள் முயற்சி.

  • தந்தைக்கும் மகனுக்குமான மோதலுக்கு வித்திட்ட முகுந்தனின் பின்னணி என்ன? ராமதாஸின் மகள் வழிப்பேரனான முகுந்தன், 4 மாதங்களுக்கு முன்புதான் பாமகவில் சேர்க்கப்பட்டதாக தகவல்.

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவு.

  • எஃப்.ஐ.ஆர் விவரங்கள் கசிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உயர் நீதிமன்றம் ஆணை.

  • அதிமுக, திமுக பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்? எனவும், கூட்டணியில் இல்லாததால் அனுமதி மறுப்பா என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.

  • அம்பேத்கர் பெயரை உச்சரிப்பது அமித்ஷா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது எனவும், பாஜகவின் இறங்குமுகம் தொடங்கிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.

  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கை நினைவிடத்தில் வைத்து நடத்தாமல் அவமதித்து விட்டதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

  • காங்கிரஸ் கட்சிதான் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை கொடுக்கவில்லை என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சனம்.

மன்மோகன் சிங்
  • புதுச்சேரியை சேர்ந்த மருத்துவரிடம் மும்பை காவல் துறையினர் எனக்கூறி 27 லட்சம் ரூபாய் மோசடி. மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை.

  • சென்னை அமைந்தக்கரையில் அழகு நிலையத்தில் குறட்டைவிட்டு தூங்கிய திருடன். மதுபோதையில் மாடியில் உறங்கியவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.

  • கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூண்டில் அடைக்கப்பட்டது புல்லட் யானை. 15 நாள் கண்காணிப்பிற்குப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அறிவிப்பு.

  • தஞ்சை, திருவண்ணாமலை உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா. ஆண்டின் கடைசி பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

  • ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து பாதிப்பு. முக்கிய சாலைகளில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரம்.

  • மத்திய பிரதேசத்தில் போக்குவரத்துத்துறை முன்னாள் அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 14 கோடி ரூபாய் பறிமுதல். 42 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களும் சிக்கின.

  • மெல்போர்னில் நடைபெறும் 4ஆவது டெஸ்டில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. 105 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதமடித்து நிதிஷ் குமார் ரெட்டி அசத்தல். மைதானத்தில் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிதிஷின் தந்தை.

  • அஜர்பைஜான் விமான விபத்து விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின். விபத்து தொடர்பாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிற்கு அறிக்கை வழியாக விளக்கம்.

putin, flight accident
  • தென்கொரியாவில் பதவிநீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் இயோலுக்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள். அதிபர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்.

  • பெரு கடற்பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக எழும்பிய ராட்சத அலைகள். முன்னெச்சரிக்கையாக 80க்கும் மேற்பட்ட துறைமுகங்கள், கடற்கரைகள் மூடல்.