புதிய தலைமுறையின் இன்றைய காலை பிரதான செய்தியில், வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடங்கும் தேதி இன்று அறிவிப்பு என பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் இணைப்புப் பகுதியில் மோன்தா புயல் உருவானது... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு... மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரத்திலும் மழை எதிர்பார்ப்பு...
சென்னைக்கு கிழக்கில் 600 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல்... அடுத்த 24 மணி நேரத்தில் கடும் புயலாக வலுப்பெற வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல்...
நாளை மாலை அல்லது இரவு காக்கிநாடா-மசிலிப்பட்டினம் இடையே மோன்தா புயல் கரையை கடக்கும் என தகவல்... ஆந்திரா, ஏனாம், தென் ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை...
தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்... அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்...
திருத்தணியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து அருவி போன்று சாலையில் கொட்டிய தண்ணீர்... தண்டவாளத்திலும் மழைநீர் தேங்கியதால் ரயில்கள் மெதுவாக இயக்கம்...
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டிய கனமழை... எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள்...
தொடர் மழையால் கும்பகோணத்தில் மழைநீரில் மூழ்கிய விளைநிலங்கள்... 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு...
திருவள்ளூர், தஞ்சை மாவட்டங்களுக்கு மத்தியக்குழுவினர் வருகை... நெல்லின் ஈரப்பதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு...
மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லை பிடித்தபோது விவசாயிகளின் வேதனையை உணர்ந்ததாக எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை... நெல்லை பிடித்திருக்க வேண்டிய முதல்வரின் கை, படக்குழுவினரின் கைகளை பற்றிக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் கூறியவை புளுகுமூட்டைகள்தான்... பொய்கள், அவதூறுகளை புறந்தள்ளி, தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவோம் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்...
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு நெல்மணிகளையே அரசு கொள்முதல் செய்துள்ளது... பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு...
நெல் கொள்முதல் விவகாரத்தில் வரும் 29ஆம் தேதி திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்... நாம் தமிழர் கட்சி அறிவிப்பு...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று கந்தசஷ்டி விழா... சூரசம்ஹாரத்தை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த திரளான பக்தர்கள்...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார்... 33 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பேருந்து மூலம் மாமல்லபுரம் வருகை...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடங்கும் தேதி இன்று அறிவிக்கப்படும் என தகவல்... மாலை 4.15 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்...
ஆசிய இளையோர் விளையாட்டில் தங்கம் வென்ற கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை... தமிழ்நாட்டு தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு அளித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
தங்க மகள் கார்த்திகாவுக்கு சென்னை கண்ணகி நகரில் உற்சாக வரவேற்பு... கண்ணகி நகரை சேர்ந்தவர் என்று பெருமையாக சொல்லுங்கள் என நெகிழ்ச்சி பேட்டி...
வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு... இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் காபி உலகம் முழுவதும் பிரபலமாகி வருவதாக பெருமிதம்...
மஹாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாநில அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்... பாஜக அரசின் மனிதாபிமானமற்ற உணர்ச்சியற்ற போக்கை வெளிப்படுத்துவதாகவும் விமர்சனம்...
உலகின் எப்பகுதிக்கும் சென்று தாக்கும் அணுசக்தி ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக ரஷ்யா அறிவிப்பு... உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நிலையில் நடவடிக்கை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் போர் நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம்... கையெழுத்திட்ட தாய்லாந்து மற்றும் கம்போடியா...
பிரபல இந்தி நடிகர் சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான்... சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலுசிஸ்தான் பெயரை குறிப்பிட்டு பேசியதால் ஆத்திரம்...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - வங்கதேசம் இடையேயான ஆட்டம் மழையால் ரத்து... மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது...
மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜி.டி. நாயுடு பயோபிக்... G.D.N திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...