தேர்தல் ஆணையம், முதல்வர் ஸ்டாலின்
தேர்தல் ஆணையம், முதல்வர் ஸ்டாலின்pt web

தமிழகத்தில் தொடங்கும் S.I.R. பணிகள்.. திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

பாஜகவின் கணக்கு, தமிழ்நாட்டை பொறுத்தவரை தப்பாகத்தான் போகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாட்டில அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளைகளை அடுத்த வாரம் தொடங்குவதாக நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது அறிவித்திருந்தது. ஏற்கனவே, பிகாரின் தேர்தல் சிறப்பு வாக்களர் திருத்தத்தின் மூலம் லட்சக்கணக்கான வாக்களர்களை நீக்கியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு, இண்டியா கூட்டணி கட்சிகள் S.I.R. க்கு எதிராக பெரும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், பிகாரில் S.I.R. ன் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக குறைந்திருந்தது.

வாக்காளர் சிறப்புத் திருத்தப்பட்டியல்
வாக்காளர் சிறப்புத் திருத்தப்பட்டியல்pt web

இந்நிலையில் தான், அடுத்த வாரம் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இதற்கு ஆளும் திமுக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" என்ற தலைப்பில் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். அதாவது, தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டு வெற்றி பெற்று விடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள். அது தமிழ்நாட்டில் பழிக்காது எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம், முதல்வர் ஸ்டாலின்
Bihar Election 2025 | கட்சி பேதமின்றி ஆதிக்கம் செலுத்தும் வாரிசுகள்.. தேர்தலில் போட்டாபோட்டி!

தொடர்ந்து, S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக நேரடியாக வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார

இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகள் குறித்தும், முதல்வர் ஸ்டாலினின் " என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" என்ற அறிக்கை குறித்தும் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார். அதில், " வாக்கு திருட்டானது மற்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய குழப்பங்கள் போல இங்கு ஏற்படக்கூடாது என்ற வகையில் தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். பல இடங்களில் இதனை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. அது தமிழகத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். பீகார் தேர்தல் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? நீதி வெல்ல வேண்டும், ஜனநாயகம் வெல்ல வேண்டும், மக்கள் வெல்ல வேண்டும் என்பது அத்தனை பேருடைய ஆசை." எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் நடைபெறவிருக்கும் வாக்களர் சிறப்புத் திருத்த பணிகள் குறித்த முழு விவரங்கள் நாளை தேர்தல் ஆணையம் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம், முதல்வர் ஸ்டாலின்
தொல்காப்பிய பூங்கா! உள்ள அப்படி என்னதான் இருக்கு? | Tholkappia Poonga Vlog | Full Details | Eco Park

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com