ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி, வடிவேலு pt web
இந்தியா

தலைப்புச் செய்திகள் : ஈரோடு கிழக்கில் திமுக போட்டி முதல் “உண்மையான வடிவேலு யார்?” வடிவேலு பேச்சு வரை

இன்றைய தலைப்புச் செய்தியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது முதல் மாமன்னன் கதாப்பாத்திரமே உண்மையான வடிவேலு என வடிவேலுவின் பேச்சு வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. முதலமைச்சர் கேட்டுக்கொண்டதால், திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என உறுதிசெய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் திமுக வேட்பாளர் போட்டியிடுவதில் தங்களுக்கு வருத்தம் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க திட்டம்...

பொள்ளாச்சி சம்பவத்தில் இபிஎஸ் தனது வாதத்தை நிரூபிக்காவிட்டால் தாம் கூறும் தண்டனையை ஏற்க தயாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

எந்த காரணத்திற்காகவும் மதுரையில் டங்ஸ்டன் திட்டம் வராது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பொங்கலுக்குப்பிறகு மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி சென்னை வந்து அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

திருமாவளவன்

நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது... உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை ஒதுக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்... மண்பானையில் பொங்கல் வைத்தும், ஆடிப் பாடியும் மாணவ, மாணவிகள் உற்சாகம்.

பக்தர்கள் வெள்ளத்தில் திணறும் சபரிமலை ஐயப்பன் கோயில்.... ஆன்லைன் முன்பதிவு, ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் தொடர்ந்து அதிகரிக்கும் கூட்டம்...

குஜராத்தில் பள்ளி வளாகத்தில் மாரடைப்பால் உயிரிழந்த 8 வயது சிறுமி... வகுப்பறைக்குச் செல்லும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்...

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் உறுதிசெய்யப்பட்டும், சிறை தண்டனையோ, அபராதமோ நீதிமன்றம் விதிக்கவில்லை.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. குஜராத்தை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

சிறு வயதில் கஷ்டங்களை மறக்கவே நகைச்சுவையை தேர்வு செய்ததாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். மாமன்னன் கதாபாத்திரம்தான் உண்மையான வடிவேலு என்றும் பேச்சு...