donald trump acquitted in actress bribery case
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு | தண்டனையின்றி ட்ரம்ப் விடுதலை!

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.
Published on

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து ட்ரம்ப் போட்டியிட்டாா். ஆனால், அதிபர் தேர்தலுக்கு முன்பு, ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவுகொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான ஸ்டோமி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.11 கோடி) ட்ரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.

donald trump acquitted in actress bribery case
டொனால்டு ட்ரம்ப்கோப்புப் படம்

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் ட்ரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை ட்ரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 பிரிவுகளில், குற்றச்சாட்டுகளை நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. மேலும், இந்த வழக்கில் ட்ரம்ப்புக்கான தண்டனை இன்று (ஜனவரி 10) அறிவிக்கப்படுவதாக மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

donald trump acquitted in actress bribery case
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

எனினும் அவரது குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவருக்குச் சிறைத் தண்டனையோ, அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் வழங்கப்பட இருக்கும் தண்டனையை எதிா்த்து ட்ரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், ட்ரம்ப்பின் அந்து மனு தள்ளுபடி குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com