தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. தமிழ்நாடு சட்டப்பேரவை pt web
இந்தியா

தலைப்பு செய்திகள்| டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் To அதானி விவகாரம்-நாடாளுமன்றத்தில் கடும் அமளி!

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது முதல் தமிழக சட்டப்பேரவைக்கான சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வரை...

PT WEB

1000கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னையிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகம் நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது...

டெல்டா மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் அதீத மழை பெய்யும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... அதி கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையை பொறுத்தவரை 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு

மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக கள ஆய்வுக்கூட்டத்தில் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டனர். நெல்லை, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையிலும், முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலான கலந்தாய்வு கூட்டத்தில், கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

“பாமக நிறுவனர் ராமதாஸூக்கு வேறு வேலையில்லாததால் தினமும் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்” என அதானியை சந்தித்து பேசியதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

“சமூக சீர்திருத்தவாதியான ராமதாஸூக்கு வேறு வேலையில்லை என பேசியது ஆணவம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ்

ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் சொன்ன கருத்துகள் எல்லாம் வேலையில்லாமல் கூறியதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க அரசு தனி இணையதளத்தை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா அபார வெற்றி

கடும் அமளிக்கிடையே தொடங்கியது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்... அதானி ஊழல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளால் இரு அவைகளும் நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை... எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

“வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க உறுதியேற்போம்” என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சம்பல்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி., எம்எல்ஏ உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக 25 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

INDvsAUS | TestCricket

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தல்...