நிம்மதி பெருமூச்சு விட்ட வேளச்சேரி மக்கள்.. அமைச்சர் கூறியது என்ன?
வேளச்சேரி மக்கள் போராட்டத்தில் பேசிய மா.சுப்ரமணியன் பிறகு செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“வேளச்சேரி முக்கால் நூற்றாண்டுக்கு முன்னதாக குடியிருப்பு பகுதிகளாக மாறி இருக்கிறது. 2005ம் ஆண்டுகளில் குடிசை மாற்று வாரியமும் வீட்டு வசதி வாரியமும் இணைந்து நீரிருப்பு இல்லாத இப்பகுதியில் நிலம் வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நீர் ஆதாரமுள்ள எந்தப்பகுதியையும் வகைமாற்றம் செய்யக்கூடாது என்ற உத்தரவின் அடிப்படையில், வேளச்சேரியில் 55.32 ஏக்கர் நிலப்பரப்பு நீர் ஆதாரம் தவிர்த்து, ஜெகன்நாதபுரம், சசிநகர், லெட்சுமி நகர் போன்ற இடங்களில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற வகையில் தொடர்ந்து அவர்களின் மேல் வழக்கு நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது” என்று பேசினார். மேலும் இவர் பேசியது என்ன என்பதைத் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.