நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 2020-21 நிதியாண்டில் இருந்து 2024-25 நிதியாண்டு வரை வரி வருவாய், வரிப் பங்கீடு குறித்த தகவல்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இவ்விவரங்களை விரிவாக ஆய்வு செய்து புள்ளிவிவரங்களை தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மஹாராஷ்ட்ராவிலிருந்து மத்திய அரசுக்கு வரியாக செல்லும் பணத்தை விட அங்கிருந்து வரிப் பங்கீடாக பெற்ற பணம் 29.45% குறைவாக இருந்தது. இதேபோல, கர்நாடகா 8.8%, ஹரியானா 4.3%, குஜராத் 3.5% செலுத்தியதை விட குறைவாகப் பெற்றுள்ளன. தமிழ்நாட்டிற்கு இவ்வித்தியாசம் 2.95% ஆக உள்ளது. தெலங்கானாவிற்கு இது 1.4% ஆகவும் கோவாவிற்கு 0.04% ஆகவும் உள்ளது.
அதே நேரம் செலுத்திய வரியை விட வரிப் பங்கீடு அதிகமாக பெற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலம் 11.2% தொகையை கூடுதலாகப் பெறுகிறது. பிகார் 8%, மத்திய பிரதேசம் 5.5%, ராஜஸ்தான் 3.55% தொகையை கூடுதலாகப் பெற்றுள்ளன.