evm, mahayuti,maha vikas aghadi pt web
இந்தியா

EVM தான் பிரச்னையா?.. இடைத்தேர்தலில் கிடைத்த மாறுபட்ட முடிவுகள்.. சந்தேகத்தை கிளப்பும் நிகழ்வுகள்?

ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் EVM மிகப்பெரிய பிரச்னையாக தோற்ற கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும் ஆளும் தரப்பினர் பதிலளிப்பதும் தொடர்கதையாக நிகழ்கிறது.

அங்கேஷ்வர்

மகாராஷ்டிர தேர்தல்

ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் EVM மிகப்பெரிய பிரச்னையாக தோற்ற கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும் ஆளும் தரப்பினர் பதிலளிப்பதும் தொடர்கதையாக நிகழ்கிறது.

சமீபத்தில் கூட நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மகாயுதி கூட்டணியில் 149 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் கடந்த 2019 தேர்தலில் பாஜக 162 இடங்களில் களம் கண்டு 105 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. பாஜக அணியிலுள்ள சிவசேனா ஷிண்டே பிரிவு 81 இடங்களில் போட்டியிட்டு 57 இடங்களில் வென்றுள்ளது. இந்த அணியிலுள்ள தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியதில் அதில் 41 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ்

மறுமுனையில் மகாவிகாஸ் அகாடி அணியில் காங்கிரஸ் 102 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் 147 வேட்பாளர்களை நிறுத்தியதில் அதில் 44 பேர் வெற்றிபெற்றிருந்தனர். காங்கிரஸ் அணியில் சிவசேனா உத்தவ் பிரிவு 92 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி 20 இடங்களை கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 86 வேட்பாளர்களை நிறுத்தியதில் 10 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

மக்களவை இடைத்தேர்தல் - காங். வெற்றி

மகாயுதி கூட்டணியின் வெற்றிக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுபட்டதில் பிரிந்த வாக்குகள், மகாயுதி கூட்டணி அரசு தேர்தல் நெருங்கும் சமயத்தில் கொண்டு வந்த திட்டங்கள், பாஜகவிற்காக ஆர்எஸ்எஸ் களத்தில் இறங்கி வேலை செய்தது என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

Ravindra Vasanthrao Chavan, நாந்தேட் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்

மறுமுனையில் வேறொரு சிக்கல் இருந்தது. மகாராஷ்டிரத்தில் நாந்தேட் எனும் மக்களவைத் தொகுதியில், சட்டமன்ற தேர்தலின்போதே இடைத்தேர்தல் நடந்தது. ஆனால், மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அந்த மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. ஒரே நாளில் நடந்த இரு மாறுபட்ட தேர்தல்களில் மக்கள் வாக்களித்தது எப்படி மாறும்? இது எப்படி என மகாவிகாஸ் அகாடியினர் கேள்வி எழுப்பினர். 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து காங்கிரஸ் 4.27 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிலையில், மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் 5.87 லட்சம் வாக்குகளைப் பெற்றது.

பரமேஸ்வரா

மகாவிகாஸ் அகாடி கூட்டணியினரோ இவிஎம் இயந்திரத்தைக் கைகாட்டுகின்றனர். கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்தார். அவர் கூறுகையில், “சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட இருக்கிறோம்” என தெரிவித்தார்,.

தேர்தல் முடிவுகள் சதித்திட்டம்

வாக்கு எண்ணிக்கை நாளின்போதே தனது சந்தேகத்தை எழுப்பிய சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், “தேர்தல் முடிவுகள் ஒரு சதித்திட்டத்தை சுட்டிக்காட்டுகின்றன” எனத் தெரிவித்திருந்தார். இப்படியாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன.

sharad pawar

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவாரிடம் இவிஎம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்துப் பேசிய சரத்பவார், “குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக ஒரு சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

ஆளுநர் ஆர்என்.ரவி

ஆளும் தரப்போ ஜார்க்கண்டில் எப்படி ஜேவிஎம் கூட்டணி வெற்றி பெற்றது என கேள்வி எழுப்புகிறது.

இன்று இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்” எனப் பேசியிருந்தார்.

EVM தான் பிரச்னை

இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டு பேசினோம் அவர் கூறுகையில், “EVM நிச்சயமாக பிரச்னைக்கு உரிய ஒன்றுதான். அதைப்பற்றி எழுதி புத்தகமாகவே வெளியிட்டுள்ளேன். என்னால் தெளிவாக சொல்லமுடியும். EVM நிச்சயமாக பிரச்னைக்கு உரிய ஒன்றுதான். மக்களவைத் தேர்தல் நடக்கிறது. அதில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால், அதே மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது.

ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்களா? சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்கள் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவிற்கே வாக்களித்திற்களாமே.. ஏன் வாக்களிக்கவில்லை.

பத்திரிக்கையாளர் அய்யநாதன்

வெற்றிக்கு காரணமாக இவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ரூ.2000 கொடுத்தோம், ரூ.2100 கொடுத்தோம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதெல்லாம் எதுவும் இல்லை. இவர்கள் நடிக்கிறார்கள். 58% வாக்குகள் என சொல்லிவிட்டு மறுநாள் 66% வாக்குகள் என்கிறார்கள். இதையெல்லாம் யார் கேட்பது? நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை நம்பச் சொல்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது.

அப்போது ஜார்கண்டிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்தானே?

அப்படியல்ல, கடந்த முறை ஜம்மு காஷ்மீருக்கும் ஹரியானாவிற்கும் நடந்தது. ஜம்மு காஷ்மீரை விட்டுவிட்டு ஹரியானாவை டார்கெட் செய்தார்கள். இந்த முறை ஜார்க்கண்டை விட்டுவிட்டு மகாராஷ்டிராவை டார்கெட் செய்தார்கள். இப்போது நீங்கள் கேள்வி கேட்கிறீர்களே... இதெல்லாம் அதற்கு ஏற்றதுபோல் செய்வதுதான். தமிழகத்திலும் அப்படி செய்திருக்க வேண்டுமே? என்பார்கள். தமிழ்நாட்டிலெல்லாம் அப்படி செய்ய முடியாது. தமிழ்நாடு அவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு உத்தரபிரதேசம், பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள்தான் வேண்டும். எல்லா இடத்திலும் அவர்கள் செய்து மாட்டிக்கொள்ள மாட்டார்கள். திருடன் எல்லோர் வீட்டிலும் திருடுவதில்லையே. குறிப்பிட்ட வீடுகளில் மட்டும்தான் திருடுவது” என தெரிவித்தார்.