மழை, ஜடேஜா pt web
இந்தியா

HEADLINES | 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் ஆட்ட நாயகனான ஜடேஜா வரை

இன்றைய தலைப்புச் செய்திகளில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் ஆட்டநாயகன் விருதினை வென்ற ஜடேஜா வரையிலான செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.

PT WEB

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என கணிப்பு...

சேலம், மதுரை, ராஜபாளையம், திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... தர்மபுரியில் பெய்த மழையால் இலக்கியம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்...

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கனமழை... தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு...

கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு... ஜலகாம்பாறை அருவியில் ஆர்ப்பரித்த வெள்ளம்... சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை...

உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... சக்தி புயல் காரணமாக மும்பையில் வரும் 7ஆம் தேதி வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை...

நெல்லை, மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்... சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே ஏற்பாடு...

சென்னை எழும்பூர்-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், கோவில்பட்டியில் நின்று செல்ல அனுமதி... பயணிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து தெற்கு ரயில்வே வாரியம் இசைவு...

முதலமைச்சர் ஸ்டாலின்

வரும் தேர்தல் தமிழர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான தேர்தல்... தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...

காவல் துறை அனுமதி மறுத்ததால் இன்று நடைபெறவிருந்த பழனிசாமியின் சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம்... 8, 9ஆம் தேதிகளில் நாமக்கல்லில் பரப்புரை மேற்கொள்வார் என அதிமுக அறிவிப்பு....

கரூர் விவகாரத்தில் அச்சத்தால் மற்றவர் மீது பழிபோடுகிறது தவெக.... விஜய் தவறாக வழிநடத்தப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தினகரன் பேட்டி....

தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி... பாஜக கூட்டணிக்கு விஜய் செல்ல வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பதில்...

கரூர் சம்பவத்துக்கு விஜய் தான் முழு பொறுப்பு என சீமான் குற்றச்சாட்டு.... பாஜக எப்படியாவது கூட்டணிக்கு விஜயை இழுக்க முயற்சிப்பதாகவும் சாடல்...

திமுக உருவாகி வைத்துள்ள கூட்டணி மாயை 2026இல் முறியடிக்கப்படும் என நயினார் நாகேந்திரன் பேச்சு... எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுக டெபாசிட் கூட வாங்காது எனவும் கருத்து...

திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி மாத சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்... பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்...

பிஹாரில் 62ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி... மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்க ஏற்பாடு...

பாகிஸ்தானுக்கு போர் விமான என்ஜின்களை ரஷ்யா வழங்குவது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த தோல்வி.... காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்...

பிஹாரில் சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்...

காஸாவில் இருந்து படைகளை வாபஸ் பெற இஸ்ரேல் சம்மதம் என டொனால்டு ட்ரம்ப் தகவல்... ஹமாஸ் அமைப்பு ஒத்துக்கொண்டால் விரைவில் போர்நிறுத்தம் அமலுக்கு வருமெனவும் பேச்சு...

ஹமாஸ் அமைப்புடன் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ நம்பிக்கை...

காஸாவில் அமைதியை மீட்டெடுக்கக் கோரி இஸ்ரேல் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் பேரணி... இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட இடங்களிலும் பாலஸ்தீன மக்களுக்கு பெருகும் ஆதரவு...

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்... சிகாகோ நகரில் போராட்டக்காரர்கள், காவல்துறையினர் இடையே கைகலப்பு...

வடக்கு அயர்லாந்தை புரட்டிப் போட்ட எமி புயல்... 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் பல்வேறு வீடுகள் சேதம்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் அறிவிப்பு... மீண்டும் அணியில் இடம்பிடித்த விராட் கோலி, ரோகித் சர்மா....

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி.. ஆட்டநாயகன் விருதை வென்றார் ரவீந்திர ஜடேஜா....

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர் வெற்றி... மற்றொரு போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் அசத்தல்...