EPS பரப்புரை கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுப்பு!
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சியினர் பரப்புரை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், பழனிசாமியின் பரப்புரை கூட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..
திருச்செங்கோட்டில் அண்ணா சிலைஅருகிலும், குமாரபாளையத்தில் ராஜன்திரையரங்கு அருகிலும், நாமக்கல்நகரில் பழைய பேருந்து நிலையம்அருகிலும், வேலூரில் பொத்தனூர்சாலையிலும் அதிமுகவினர் அனுமதிகேட்ட நிலையில், அனைத்தும் நெடுஞ்சாலைப்பகுதி என்பதால் அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டா இடத்தில் பரப்புரைநடத்திக்கொள்ளஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பழனிசாமியின் சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 8ஆம் தேதிதிருச்செங்கோடு, குமாரபாளையத்திலும், 9ஆம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில் பழனிசாமி பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 10ஆம் தேதி மொடக்குறிச்சி, ஈரோடுகிழக்கு பகுதிகளில் பழனிசாமிபரப்புரை செய்வார் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.