மணிப்பூர் மக்கள்
மணிப்பூர் மக்கள் PT
இந்தியா

Exclusive: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது?

Prakash J

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை, இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மோடி இதுவரை அம்மாநிலத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்காததை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முன்னதாக, மணிப்பூர் கலவரம் காரணமாக 200க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்து போயிருப்பதாகவும், 50,000க்கும் மேற்பட்டவர்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கலவரம் காரணமாக, 20,000க்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களும் வாக்களிக்க வகை செய்யும்வகையில் நிவாரண முகாம்களிலேயே வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மணிப்பூரில் தற்போதைய அரசியல் கள நிலவரம் எப்படியிருக்கிறது என்பது குறித்து நம்முடைய புதிய தலைமுறை நேரடியாகக் களம் கண்டது. அதுகுறித்த வீடியோ தொகுப்பை இந்த வீடியோவில் அறியலாம்.

இதையும் படிக்க: ஓபிஎஸ்க்கு அல்வா கொடுத்த அண்ணாமலை! ஒரு சீட் கூட இல்லை; முடிவுக்குவந்தது பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு!