ஓபிஎஸ்க்கு அல்வா கொடுத்த அண்ணாமலை! ஒரு சீட் கூட இல்லை; முடிவுக்குவந்தது பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு!

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்றுடன் அக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றுள்ளது.
பாஜக, ஓபிஎஸ்
பாஜக, ஓபிஎஸ்ட்விட்டர்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளன. ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலுக்கான தேதிகள் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

தேர்தல் அறிவிப்பையொட்டி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணிப் பங்கீடு குறித்து தீவிரமாக பேசி வருகின்றன. ஒருவழியாக, அனைத்துக் கட்சிகளிலும் தொகுதி பங்கீடுகள் முடிவுக்கு வந்துள்ளன. ஏற்கெனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின் அதிமுக கூட்டணியிலும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது.

இதையும் படிக்க: தமிழர்கள் பற்றி சர்ச்சை பேச்சு: மத்திய இணையமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

பாஜக, ஓபிஎஸ்
”நாளை மிகப்பெரிய அறிவிப்பு இருக்கு” அதிமுக-தேமுதிக இடையே 5 சீட் ஒப்பந்தம்.. ட்விஸ்ட் வைத்த பிரேமலதா!

இதற்கிடையே 3வது பாஜகவுடன் பாமக, அமமுக, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அமமுகவுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேநேரத்தில், த.மா.கா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில், அதுகுறித்த உடன்பாடும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

அந்தவகையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்தத் தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. த.மா.காவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து பாஜகவுடன் கூட்டணிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றதையடுத்து, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னதாக, புதிய நீதிக்கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

பாஜக - 20

பாமக - 10

த.மா.கா - 3

அ.ம.மு.க. - 2

புதிய நீதிக்கட்சி - 1

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - 1

இந்திய ஜனநாயக கட்சி - 1

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - 1

இதில் 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதையும் படிக்க: “வழக்கு விசாரிக்கும் போதே கொண்டுவந்தது ஏன்” - CAA-க்கு எதிராக 236 மனுக்கள் - சூடிபிடித்த விசாரணை!

பாஜக, ஓபிஎஸ்
“பாதிக்குமேல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ஓகே தான்.. ஆனா இவங்கலாம்..” - திமுக வியூகம் எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com