மனோஜ்  ஜராங்கே
மனோஜ் ஜராங்கே ட்விட்டர்
இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு: மனோஜ் ஜராங்கேவின் ஊர்வலத்தால் முடக்கியது புனே! ஜன.26 முதல் தொடர் உண்ணாவிரதம்!

Prakash J

மீண்டும் சூடுபிடித்த மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார்.

மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அம்மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஜனவரி 20: மும்பை நோக்கி மனோஜ் ஜராங்கே நடைப்பயணம்

இடஒதுக்கீடு பெறுவதற்காக, மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் அக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 20-ஆம் தேதி முதல் மும்பையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வோம். இறுதியில் மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்திருந்திருந்தார். அதன்படி, கடந்த ஜனவரி 20ஆம் தேதி, ஜல்னா மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி மனோஜ் ஜராங்கே நடைப்பயணத்தைத் தொடங்கினார். நேற்று அவர் புனேவைச் சென்றடைந்தார்.

அப்போது பேசிய அவர், “இரண்டு முதல் இரண்டரை கோடி மராத்தா சமூக மக்கள் மும்பைக்கு வருவார்கள். எங்களின் பலத்தை ஜனவரி 26ஆம் தேதி நிரூபிக்க உள்ளோம். நான் எனது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். மராத்தா சமூக மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் நான் திரும்பிச் செல்லமாட்டேன். அரசாங்கம் அனுமதி மறுத்தாலும், மும்பையில் ஜனவரி 26 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவேன்” என்றார்.

முன்னதாக, புனே மாவட்டத்தில் உள்ள ஷிக்ராபூரை அவரது அணிவகுப்பு வாகனங்கள் அடைந்தபோது, மக்கள் பூதூவி வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர். அந்த அணிவகுப்பில், குறைந்தது 15,000 பேர் சுமார் 750 வாகனங்கள் சென்றனர் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதன்மீதான விசாரணையும் விரைவில் வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கர்பூரி தாக்கூருக்கு பாரத் ரத்னா; நிதிஷ்க்கு செக்? OBC மக்களை குறிவைக்கும் பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

மகாராஷ்டிராவில் நடப்பது என்ன? இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடித்தது எப்போது?

மகாரஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தரப்பு, பாஜகவுடன் இணைந்து ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடித்துள்ளது. மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அமைதி ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, aமனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி போலீசார் இங்கு நடத்திய தடியடி நடத்தியது பேசுபொருளாக மாறியது.

மனோஜ் ஜராங்கேயை நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே!

இதைத் தொடர்ந்து, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை தீவிரமடைந்ததையொட்டி, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேயை நேரில் சென்று சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி ஜாரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதோடு இந்த மாதம் (அக்டோபர்) 24ஆம் தேதிக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று காலக்கெடு கொடுத்திருந்தார்.

அந்தக் கெடு முடிந்த நிலையில், மீண்டும் மராத்தா பிரிவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மேலும், மனோஜ் ஜராங்கே பாட்டீல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். வன்முறை மற்றும் எம்.எல்.ஏ., எம்.பிக்களின் ராஜினாமாக்களால் ஆளும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.