ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு.
அரையாண்டு விடுமுறை முடிந்ததையடுத்து பள்ளிகள் இன்று திறப்பு. விடுமுறை நீடிக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், வகுப்புகள் இன்று தொடங்கப்படுவதை உறுதி செய்தது பள்ளிக்கல்வித் துறை.
சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை. பொதுமக்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
500 அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் முடிவை வரவேற்றுப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம். தேசிய கல்வி கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என விமர்சனம்.
தமிழக கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்கிறது தமிழக அரசு? என்று அமைச்சர் அன்பில் மகேஸின் பேச்சை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சனம்
“அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பதாகக் கூறவில்லை; வளர்ச்சியில் பங்களிப்பு இருக்கும் என்றே கூறினோம்” என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியீடு. சென்னை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளையும் விரிவாக்கம் செய்ய ஆணை.
விவசாயிகளுக்கு குறைந்த விலையில் DAP உரம் கிடைப்பதற்காக கூடுதலாக 3 ஆயிரத்து 850 கோடி ரூபாய் வழங்கும் சிறப்புத் திட்டத்தை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
கடந்த டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பு. 2023 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 7 புள்ளி 3 சதவீதம் அதிகம்
பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் சிறப்பு பூஜையில் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்புக்கு காரணமான போபால் விஷவாயு கசிவு சம்பவம். 40 ஆண்டுகளுக்குப் பிறகு விஷவாயுவின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் பணி தொடக்கம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக, பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல். தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரிக்கை.
ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி சர்ச்சைப் பேச்சு.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்த ஓபிஎஸ், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக பேட்டி.
ராமநாதபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டதால், நிகழ்விடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த சோகம்.
சென்னை குன்றத்தூர் அருகே இருசக்கரவாகனம் மீது மாடு முட்டியதில் பெண் உயிரிழப்பு. மகன் கண்முன்னே தாயார் உயிரிழந்த சோகம்.
திரைத்துறையில் முன்பு இருந்ததைவிட புதுப்பொலிவுடன் திரும்பி இருப்பதாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நம்பிக்கை. புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியிட்ட முதல் வீடியோவை பகிர்ந்து வரும் ரசிகர்கள்.
அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் பகுதியில் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு. தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் டெஸ்லாவின் சைபர்டிரக் திடீரென வெடித்ததால் பதற்றம். தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என காவல் துறை சந்தேகம்.
உலக பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை மேக்னல் கார்ல்சன் மற்றும் இயான் பகிர்ந்து கொண்டதால் சர்ச்சை. சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு கிராண்ட் மாஸ்டர்கள் கண்டனம்.