ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்pt web

நடிகர் ரஜினிகாந்த் உடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

புத்தாண்டை முன்னிட்டு சினிமா வசனத்தைக் குறிப்பிட்டு X களத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து பதிவிட்டிருந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
Published on

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அரை மணி நேரத்திற்கு மேலாக ரஜினியுடன் சந்தித்து பேசினார்

OPS
Rajinikanth
OPS Rajinikanth

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரஜினியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

ஓ.பன்னீர் செல்வம்
புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை!

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். ரஜினிகாந்த் திடகாத்திரமாக ஆரோக்கியத்துடன் உள்ளார். அரசியல் எதுவும் பேசவில்லை.. அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளேன். வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறாமல் தடுப்பது அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.

இன்று காலை புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்ட ரஜினிகாந்த்.. "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான். கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் கைவிட்டு விடுவான்" என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர் செல்வம்
கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட விடா முயற்சி.. பொங்கல் ரேஸில் மோதும் 4 திரைப்படங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com