ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் web
இந்தியா

இண்டியா கூட்டணிக்கு பாதகமாக இருக்கிறதா காங்கிரஸ்? பீகார் முன்னிலை நிலவரம் சொல்லும் செய்தி என்ன?

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தின்படி, மகா கட்பந்தன் கூட்டணியில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 11 மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது, மகா கட்பந்தன் கூட்டணிக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.

PT WEB

பீகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்குத் தேவையான 122 இடங்களை தாண்டி 191 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றன. மகா கட்பந்தன் கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை காட்டிலும் பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது.

பிகார் தேர்தல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்த வரையில், பாஜக போட்டியிட்ட 101 இடங்களில், 80 ல் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளமும் தான் போட்டியிட்ட 101 இடங்களில் 84-ல் முன்னிலை வகிக்கிறது. இவ்வாறு, எண்.டி.ஏ கூட்டணியில் முக்கியமான இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மகா கட்பந்தன் கூட்டணியில் நிலைமை வேறாக இருக்கிறது. 143 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 37 இடங்களில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. மேலும், 29 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரிகள் 3 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருக்கின்றன.

ஏற்கனவே, ராஷ்டிர ஜனதா தளம் 60 முதல் 80 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 5 முதல் 15 இடங்களில்தான் வெற்றி பெறும் எனக் கணிப்புகள் கூறுயிருந்தன. கடந்த, 2020 சட்டப்பேரவை தேர்தலிலும் 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிர ஜனதா தளம் கட்சி, 75 இடங்களை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 70 இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அதுபோலவே, இந்த தேர்தலிலும் கடுமையான போட்டியை ரஷ்டிரிய ஜனதா தளம் உருவாக்கினாலும், காங்கிரஸ் 11 இடங்களில் முன்னிலை பெற்று மோசமான நிலையில், இருந்து வருகிறது.

ராகுல்காந்தி

இவ்வாறு, காங்கிரஸ் மிகப்பெரிய பின்னடைவை மகா கட்பந்தன் கூட்டணிக்கு காங்கிரஸ் ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் 30 இடங்களுக்கு மேல் பிடிக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், போட்டியானது கடுமையானதாக இருந்து அதனால் வாக்குகள் சிதறியிருக்கலாம் என்று தெரியவருகிறது. கடந்த, தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் மகா கட்பந்தனின் தோல்விக்கு காங்கிரஸ் காரணமாக அமையுமா என்பது இன்று பிற்பகலுக்குள் தெரியவரும்.