Rail pt desk
இந்தியா

புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்திய IRCTC.. முக்கிய அம்சங்கள் என்ன?

புதிய இணையதளம் பல இந்திய மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியைப் பயன்படுத்துவதில் சிரமப்படும் நாடு முழுவதிலுமுள்ள பயணிகள் இதை எளிதாக அணுக முடியும்.

Prakash J

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) தனது இணையதளத்தைப் பயணிகளின் வசதிக்காக முற்றிலும் புதிய பொலிவுடன் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்துள்ளது.

இந்தியாவின் பொதுப் போக்குவரத்துத் துறையில் ரயில்வே துறையும் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் போக்குவரத்தை நம்பி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிக்கின்றனர். இதையடுத்து, ரயில்வே துறையும் பயணிகளின் வசதிக்காக அடுத்தடுத்த மாற்றங்களைச் செய்துவருகிறது. இந்த நிலையில், இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) தனது இணையதளத்தைப் பயணிகளின் வசதிக்காக முற்றிலும் புதிய பொலிவுடன் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்துள்ளது. டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும் வேகமாகவும் மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த வடிவமைப்பைச் செய்துள்ளது. அதன்படி,

ரயில்கள்

பயணிகளுக்கு இனி தோராயமாக இருக்கை ஒதுக்கப்படுவதற்குப் பதிலாக, முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கு விருப்பமான இருக்கை அல்லது படுக்கையைத் தேர்வுசெய்ய முடியும்.

மேலும், முன்பதிவை உறுதி செய்வதற்கு முன்பு, வெவ்வேறு தேதிகளுக்கான பயணச்சீட்டு விலைகளை ஒப்பிட்டுப் பார்க்க கட்டண அட்டவணை, பயனர்களை அனுமதிக்கும். இது, பணத்தைச் சேமிக்க விரும்பும் நெகிழ்வான பயண அட்டவணையைக் கொண்ட எவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்லீப்பர், ஏசி 3 டயர், ஏசி 2 டயர் மற்றும் பிற அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகளின் இருப்பு இனி ஒரே திரையில் காட்டப்படும். இதனால், ஒவ்வொரு வகுப்பையும் தனித்தனியாகச் சரிபார்க்க வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது.

அதேபோல், புதிய இணையதளம் பல இந்திய மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங்கிலம் அல்லது இந்தி மொழியைப் பயன்படுத்துவதில் சிரமப்படும் நாடு முழுவதிலுமுள்ள பயணிகள் இதை எளிதாக அணுக முடியும்.

தற்போது தனித்தனி செயல்முறைகளாக உள்ள மாற்றுத்திறனாளி பயணிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சலுகை முன்பதிவுகளும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கப்பட உள்ளது.

மேலும், முன்பெல்லாம் ரயில்களைத் தேடுவதற்கு முன்பே லாக்-இன் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, இணையதளத்திற்குள் நுழைந்தவுடனேயே லாக்-இன் செய்யாமலேயே ரயில்கள், கட்டணம் மற்றும் இருக்கை வசதிகளை எளிதாகத் தேட முடியும்.

புதிய இணையதளம் பல இந்திய மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
IRCTC
Rail

டிக்கெட் புக் செய்யும்போது மட்டும் லாக்-இன் செய்தால் போதுமானது. அதேபோல், ஒவ்வொரு ரயிலையும் தனித்தனியாகக் கிளிக் செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட தேதியில் உள்ள அனைத்து ரயில்களின் இருக்கை நிலவரத்தையும் ஒரே பக்கத்தில் தெளிவாகப் பார்க்க முடியும்.

அடுத்து, தட்கல் (Tatkal) நேரங்களில் ஏற்படும் இணையப் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் இதன் சர்வர் வேகம் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கணினி மற்றும் மொபைல் இரண்டிலும் பார்ப்பதற்கு எளிமையாகவும், பெரிய எழுத்துக்களுடனும், குழப்பமில்லாத வண்ணங்களுடனும் தற்போதைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பிறகு, அதற்கான பணம் (Refund) எந்த நிலையில் உள்ளது என்பதை பயனர் கணக்கின் (Dashboard) மூலமாகவே மிக எளிதாகக் கண்காணிக்க முடியும்.
IRCTC
ரயில்

'ஆஸ்க் திஷா 2.0' (Ask DISHA) என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளர் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் தட்டச்சு செய்தோ அல்லது குரல் கட்டளை (Voice command) மூலமாகவோ டிக்கெட் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ அல்லது உங்கள் கேள்விகளுக்குப் பதில் பெறவோ முடியும்.

மேலும், டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பிறகு, அதற்கான பணம் (Refund) எந்த நிலையில் உள்ளது என்பதை பயனர் கணக்கின் (Dashboard) மூலமாகவே மிக எளிதாகக் கண்காணிக்க முடியும்.