சோமாலிய கொள்ளையர்கள்
சோமாலிய கொள்ளையர்கள் PT
இந்தியா

சோமாலிய கொள்ளையர்களிடம் சிக்கிய பாக். மீனவர்கள்..மீட்ட இந்திய கடற்படையினர்! அரபிக் கடலில் திக் திக்!

Jayashree A

அரேபிய கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் (IOR) கடற்கொள்ளையர்களை முறியடிக்க இந்திய கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று, அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தான் மீனவர்களை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை.

நேற்று முந்தினம் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என் எஸ் சுமேதா கப்பல் அரபிக் கடற்பகுதியில் ரோந்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தது. அச்சமயம் ஈரானிய கப்பலான எஃப்வி FV அல்-கம்பர் என்ற மீன்பிடி கப்பல் ஒன்று அரபிக்கடல் பகுதியில் வந்துகொண்டிருந்தது. எஃப்வி மீன்பிடி கப்பல் சோமாலிய கொள்ளையர்களின் கைவசம் இருப்பதைத் தெரிந்துகொண்ட இந்தியக்கடற்படையினர், உடனடியாக இந்த தகவலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை போர்க்கப்பல் INS திரிசூல் கப்பலுக்குத் தெரிவித்தனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு திரிசூல் கப்பலும் விரைந்து வந்துள்ளது. சோமாலிய கொள்ளையர்களின் வசம் இருந்த FV அல்-கேம்பர் கப்பலைச் சுற்றி வளைத்த இரு இந்திய கடற்படை வீரர்களும், கொள்ளையர்களை எச்சரித்ததுடன், அவர்களை சரணடையுமாறும் பிணைக்கைதிகளை விடுவிக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.

இந்திய கடற்படைக்கு பயந்த 30 சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாங்கள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 23 பாகிஸ்தானிய மீனவர்களை விடுவித்ததுடன், இந்திய கடற்படையினரிடம் சரணடைந்தனர். அரபிக்கடலில் சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில், எந்த துப்பாக்கிச் சண்டையோ அல்லது இரத்தக்களரியோ இல்லாமல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து 23 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏடன் வளைகுடாவில் இருந்து புறப்பட்ட ஒரு வணிகக் கப்பல், ஏவுகணையால் தாக்கப்பட்டதால் தீப்பிடித்து எரிந்தது. அதை தக்க சமயத்தில் காப்பாற்றிய இந்திய கடற்படை அதிலிருந்த 21 பணியாளர்களை பத்திரமாக மீட்டது. அதே போல கடந்த 15-ம் தேதி கொல்கத்தா பகுதியில் இந்திய கடற்படை வீரர்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களை கைது செய்து 15 பிணைக்கைதிகளை மீட்டதும் குறிப்பிடத்தக்கது.