சோமாலியா கடற்கொள்ளையர்களை சரணடைய வைத்து, பிணைக்கைதிகளை மீட்ட இந்திய கடற்படையினர்

சோமாலியா கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கப்பலை இடைமறித்து, கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படையினர் சரணடைய வைத்துள்ளனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டிருந்த சரக்கு கப்பலில், கப்பல் குழுவினர் பலர் சிக்கி இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து கடந்த 15ம் தேதி இந்திய கடற்பகுதிக்கு அருகே வந்த அந்த கப்பலை கடற்படை வீரர்கள் INS கொல்கத்தா போர் கப்பல் மூலம் இடைமறித்து நிறுத்தினர்.

அப்போது கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கடற்கொள்ளையர்கள் 35 பேர் சரணடைந்துள்ளனர். கப்பலில் பினைக்கைதிகளாக இருந்த 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சோமாலியா கடற்கொள்ளையர்கள்
தொடரும் நடவடிக்கை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேர் கைது
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com