இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் களம் இறங்கிய பிரபலங்கள்
இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் களம் இறங்கிய பிரபலங்கள் puthiya thalaimurai
இந்தியா

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் களம் இறங்கிய பிரபலங்கள் யார் யார்?

PT WEB

இன்று நடக்கும் மக்களவை தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்...

கேரளா

கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆனி ராஜா என்பவர் சிபிஐ-க்காகவும் சுரேந்திரன் பாஜகவிற்காகவும் போட்டியிருகின்றனர்.

திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் சார்பில் ராஜிவ் சந்திரசேகரும் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் மற்றும் சிபிஎம் சார்பில் பண்யன் ரவீந்திரனும் போட்டியிடுகிறார்கள்.

திருச்சூரில் பாஜக சார்பில் சுரேஷ் கோபியும் காங்கிரஸ் சார்பில் முரளிதரனும் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம் மதுராவில் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினியும் மீரட் தொகுதியில் பாஜக சார்பில் அருண்கோவிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும், ஜலோர் தொகுதியில் வைபவ் கெலோட்டும் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகா

கர்நாடகாவில் தார்வாட் பகுதியில் பிரகலாத் ஜோஷியையும், பெலகாவி பகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் ஹவேரி பகுதியில் பசவராஜ் பொம்மை ஆகியோரை பாஜக களத்தில் இறக்கியுள்ளது.

மாண்டியா தொகுதியொல் ஹெச்.டி.குமாரசாமி மஜத சார்பிலும், பெங்களூரு ரூரல் தொகுதியில் டிகே சுரேஷ் காங்கிரஸ் சார்பிலும் ஷிமோகா தொகுதியில் கீதாசிவராஜ்குமார் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்க மாநிலம் பாலூர்காட் தொகுதியில் சுகந்தாமஜூம்தார் பாஜக சார்பில் போட்டியிடுகின்றார்.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் தொகுதியில் பூபேஷ் பாகல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் தொகுதியில் அசோக் சவான் பாஜக சார்பிலும், அகோலா தொகுதியில் பிரகாஷ் அம்பேத்கர் விபிஏ சார்பிலும் போட்டியிடுகின்றனர்.