குஜராத்தில் காப்பீட்டு தொகையை பெற விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய தொழிலதிபர் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( 27, டிசம்பர் 2024) அன்று , பனஸ்கந்தா மாவட்டத்தில் கார் ஒன்று விபத்தில் சிக்கி எரிந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்று சோதனை செய்தபோது உருக்குலைந்த நிலையில் உடலானது கிடந்துள்ளது. இதனையடுத்து, விபத்தில் இறந்தது யார் என்று போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.இதில் , தன்புரா கிராமத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் பகவான்சிங் கர்சான்ஜி பார்மர் (40) என்பவரின் கார்தான் தீயில் எரிந்திருப்பது தெரியவந்தது. ஆனால், கார் விபத்தில் சிக்கியதில் ஏதோ மர்மம் உள்ளது என்று போலீஸார் புரிந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பிரேதப்பரிசோதனை செய்து பார்த்ததில், தன்புரா கிராமத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் பகவான்சிங் கர்சான்ஜி பார்மர் (40) என்பவரின் கார் தீயில் எரிந்திருப்பது தெரியவந்தது.
ஆனால், பிரேதப் பரிசோதனையில் முடிவில் பார்மாரின் குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகளுடன் இறந்த உடலின் மாதிரிகள் பொருந்தவில்லை என்பது உறுதியானது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காவல்துறை அளித்த தகவலின்படி,
தன்புரா கிராமத்தில் வசித்து வரும் தல்பத்சிங் பர்மர் என்பவர், ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.. தனது ஓட்டலில் நல்ல முறையில் நடத்த திட்டமிட்ட இவர், தனது நண்பரிடமிருந்து ரூ 15 லட்சம் கடனாக பெற்றுள்ளார். மேலும், கடனில் வாங்கிய காருக்கும் இஎம்ஐயாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது.
இப்படி நிதிச் சுமையில் சிக்கிய இவர், அதிலிருந்து தப்பிக்க ஒரு குறுக்கு வழியை யோசித்துள்ளார். அப்படி சிக்கிய திட்டம்தான். காப்பீட்டு தொகையில் கிடைக்கும் பணம்.
எல்ஐசியில் ரூ.26 லட்சம் பாலிசியில் எடுத்துள்ள பார்மர், கார் விபத்தில் உயிரிழந்தால் கூடுதலாக ரூ. 1 கோடி கிடைக்கும் என்று தெரிந்துக் கொண்டுள்ளார். இப்படி 1.26 கோடி காப்பீடு தொகையை பெறதான் விபத்தில் இறந்ததாக நாடகமாட முடிவெடுத்துள்ளார். இதற்கு பார்மரின் குடும்பத்தினரும் நண்பர்களும் துணைப்புரிந்துள்ளனர்.
இதற்காக, தனது கிராமத்தில் கடந்த 4 வாரங்களுக்கு முன்பு உயிரிழந்த ரமேஷ் என்பவரின் உடலை மயானத்தில் இருந்து நண்பர்கள் சிலரின் உதவியோடு இரவு நேரத்தில் சென்று , தோண்டு எடுத்து வந்துள்ளார்.
இதனை தனது காரில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இந்த காட்சிகள் விபத்து நடந்த இடத்தில் வைத்திருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இறுதியில், காப்பீடு தொகையை பெறுதவதற்காக பார்மர் நடத்திய நாடகம்தான் இது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, பார்மரின் நண்பர்கள் மகேஷ், பீமா ராஜ்புத், தேவா, சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான பர்மரை தலைமறைவாக உள்ளநிலையில், அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.