Headlines
Headlinesfacebook

Headlines | களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் முதல் மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதலமைச்சர் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் To மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதலமைச்சர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Published on
  • தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைப்பெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் 2025ஆம் ஆண்டை உற்சாகமாக மக்கள் வரவேற்றனர்.

  • தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம். நள்ளிரவில் வீதிகளில் திரண்டு மக்கள் குதூகலம்.

  • உலக நாடுகளில் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்ற மக்கள். விண்ணை பகலாக்கிய வாண வேடிக்கைகளை வெடித்து வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.

  • புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு. இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலை கடலென திரண்ட பக்தர்கள்.

  • புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்... எங்கும் நலமே சூழட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.

  • மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் என வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.

  • மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமையை காப்போம் என தவெக தலைவர் விஜய் வாழ்த்து. மேலும், உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகம் அமைப்போம் என்றும் உறுதி.

  • அஜித் குமாரின் விடா முயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என படக்குழு அறிவிப்பு. மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம்.

  • தங்களது போராட்டம் நாடகம் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடத்திய போராட்டங்கள் அனைத்தும் நாடகமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கொடூர மன நிலையுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்.

  • சென்னை கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் தீண்டாமை கொடுமை நடப்பதாக புகார். பட்டியல் சமூக மாணவர்களை சாதி ரீதியாக திட்டியதாக 3 ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு.

  • மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் பிரேன் சிங்.இந்நிலையில், பிரதமர் மோடி மணிப்பூரை புறக்கணித்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி.

  • கேரளாவை மினி பாகிஸ்தான் என விமர்சித்த மஹாராஷ்டிர அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு பினராயி விஜயன் கண்டனம். மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் கோட்டையாக கேரளா விளங்குவதாக பதில்.

  • சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டம்.

  • ஆண்டின் இறுதி நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவுடன் நிறைவடைந்தது வர்த்தகம். இறக்கங்கள் இருந்தாலும் ஓராண்டில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 8 விழுக்காடு அளவுக்கு மேல் வளர்ச்சியடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com