தனிநபர் மசோதாக்கள்
தனிநபர் மசோதாக்கள்முகநூல்

2019-2024 | தனிநபர் மசோதாக்கள் மீதான விவாதம்; ஒதுக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு!

2019 இல் தொடங்கி 2024இல் நிறைவடைந்த 17ஆவது மக்களவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் தனிநபர் மசோதாக்கள் குறித்து விவாதிக்க ஒட்டுமொத்தமாக 9.08 மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

2019 இல் தொடங்கி 2024இல் நிறைவடைந்த 17ஆவது மக்களவையில் உறுப்பினர்கள் தாக்கல் செய்யும் தனிநபர் மசோதாக்கள் குறித்து விவாதிக்க ஒட்டுமொத்தமாக 9.08 மணிநேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாக்கள் குறித்து விவாதிக்க 27.01 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தீர்மானங்கள் மக்களவையில் 16.43 மணி நேரமும் மாநிலங்களவையில் 20.78 மணி நேரமும் விவாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 18ஆவது மக்களவையில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு கூட்டத் தொடர்களில் 0.15 மணிநேரமும் மாநிலங்களவையில் 0.62 மணி நேரமும் விவாதிக்கப்பட்டுள்ளன. தனிநபர் தீர்மானங்கள் மக்களவையில் 1.98 மணி நேரமும் மாநிலங்களவையில் 2.09 மணி நேரமும் விவாதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் கட்சிகளைத் தாண்டி உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வழிமுறை தனிநபர் மசோதாக்களும் தீர்மானங்களும்தான். சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் தனிநபர் மசோதாக்கள், தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு மிகக் குறைவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் மசோதாக்கள்
மகாராஷ்டிரா | கடற்கரையில் சிக்கிய ஃபெராரி கார்.. இழுத்துச் சென்ற மாட்டு வண்டி.. #ViralVideo

இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை 14 தனிநபர் மசோதாக்கள் மட்டுமே இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளன.1970க்குப் பிறகு ஒரு மசோதாகூட நிறைவேறியதில்லை. PRS Legislative Research என்னும் அரசுசாரா ஆய்வு மையம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com