elon musk x page
இந்தியா

ஒரு மாதத்திற்கு இவ்ளோவா.. இந்தியாவில் இணையச் சேவை கட்டணத்தை நிர்ணயம் செய்த எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையச் சேவை, இந்தியாவில் அதன் குடியிருப்புத் திட்ட கட்டணமாக ரூ.8,600ஐ நிர்ணயம் செய்துள்ளது.

Prakash J

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையச் சேவை, இந்தியாவில் அதன் குடியிருப்புத் திட்ட கட்டணமாக ரூ.8,600ஐ நிர்ணயம் செய்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க், விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்கி வருகிறார். அது, இந்தியாவிலும் விரிவடைந்துள்ளது. விரைவில், நாட்டின் தகவல் தொடர்பு சந்தையில் பரந்த அளவில் நுழைவதற்குத் அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவில் செயல்படுத்த் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் கட்டணம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவிற்கான அதன் மாதாந்திர குடியிருப்புத் திட்டத்தின் விலையை முறையாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மாதாந்திர குடியிருப்புக் கட்டணமாக ரூ.8,600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Hardware கட்டணம் ரூ.34,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஸ்டார் லிங்கின் இணையச் சேவையை சோதனை அடிப்படையில் 30 நாட்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புத் திட்டத்திற்கான விலை நிர்ணயம் தற்போது வெளியிடப்பட்டிருந்தாலும், வணிக சந்தா தொடர்பான தகவல்களை அது தெரிவிக்கவில்லை. அது, இறுதி செய்யப்பட்டு பிறகு வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

elon musk

அதேநேரத்தில், இந்த மாதாந்திர குடியிருப்புத் திட்ட கட்டணத்தில், அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், 99.9% க்கும் அதிகமான இயக்க நேரத்தை வழங்கும் வகையில் செயல்படக்கூடியதாகவும் ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் இணைப்பைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு உபகரணங்களை மட்டுமே செருக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம், ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஆட்சேர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.