இந்தியர்கள், தங்கள் வீட்டுத் திருமணங்களை ஒரு வியாபார வாய்ப்பாக மாற்றும் வகையில் புதிய ட்ரெண்டிங் வைரலாகி வருகிறது. அது தான்"JOIN MY WEDDING" ... அது எப்படி இருக்கும் பார்க்கலாம்.. தெரியாத கல்யாணத்துக்கு போகும் போது சங்கடமா feel பண்ணுவோம்.. இனி அந்த சங்கடத்திக்கு இடமில்ல.. நீங்கள் பணம் கட்டுனா போதும், இனி யார் கல்யாணத்துக்கு வேணும்னாலும் போகலாம்.. அது எப்படிப்பா முடியும்னு கேட்கறீங்களா.. அதுக்கு தான் வந்திருக்கு ஜாயின் மை வெட்டிங் கான்செப்ட்.. மறக்க முடியாத திருமண அனுபவத்தைத் தேடுறீங்களா? மணமக்களை வாழ்த்தி, அவங்க விருந்துல சாப்பிட்டு, அவங்களோட சேர்ந்து டான்ஸ் ஆட விருப்பமா? அப்போ இந்த 'ஜாயின் மை வெட்டிங்' கான்செப்ட் உங்களுக்குத்தான்..
இந்திய திருமணங்கள்னா கலர் கலரா, விதவிதமான சாப்பாடு, பாட்டு, டான்ஸ்னு அமர்க்களமா இருக்கும். வெளியில இருந்து பாக்கறதுக்கும், உள்ள போய் கலந்துக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வித்தியாசத்தை உணர்றதுக்கான வாய்ப்பைத்தான் இந்த 'ஜாயின் மை வெட்டிங்' வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் கொடுக்குது... சில புதுமையான யோசனை உள்ள இந்தியர்கள், தங்கள் வீட்டுத் திருமணங்களை ஒரு பிசினஸ் வாய்ப்பா மாத்திருக்காங்க...
அவங்க, தங்கள் திருமணத்துல கலந்துக்க விரும்பும் வெளிநாட்டுப் பயணிகளை அழைக்கிறாங்க. வெளிநாட்டுக்காரங்க ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, இந்தத் திருமணத்துல விருந்தினர்களா கலந்துக்கறாங்க... திருமண வீட்டார், அந்த வெளிநாட்டு விருந்தினர்களை தங்கள் குடும்பத்துல ஒருத்தரா பாக்குறாங்க.
கல்யாணத்துக்கு முன்னாடி நடக்குற மெஹந்தி, சங்கீத் போன்ற கொண்டாட்டங்கள்ல இருந்து, கல்யாண சடங்குகள் வரைக்கும் எல்லாத்துலயும் அவங்களை ஆர்வமாப் பங்கெடுக்க வைக்கிறாங்க. நம்ம ஊரு ட்ரெடிஷனல் டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு, மணமக்களோட செல்ஃபி எடுத்துக்கிட்டு, நம்ம சாப்பாட்ட ரசிச்சுச் சாப்பிட்டு, டான்ஸ் ஆடி இந்த அனுபவத்தை அவங்க கொண்டாடுறாங்க...
நம்ம இந்திய கலாசாரத்தை, குறிப்பா நம்ம விருந்தோம்பலை, உலகத்துக்கு நேரடியா கொண்டு போறதுக்கான ஒரு வாய்ப்பு இது. அதேசமயம், நாமளும் வெளிநாட்டுப் பயணிகள் கிட்ட பேசிப் பழக ஒரு வாய்ப்பு கிடைக்குது... இந்த யோசனை ஆரம்பத்துல கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சாலும், இப்போ சோஷியல் மீடியால செம வைரல் ஆயிட்டு இருக்கு.
ஏன்னா, கல்யாணச் செலவுகள் ரொம்ப அதிகமா இருக்கிற இந்தக் காலத்துல, ஜாயின் மை வெட்டிங் கான்செப்ட் மூலமா வர வருமானம் பலருக்கும் கைகொடுக்குதுனு சொல்றாங்க.. இனி கல்யாணத்துக்கு பிளான் பண்றங்வங்க, அய்யோ செலவு ஜாஸ்தியாகுமே அப்படினும் திங்க் பண்ணீங்கன்னா.. இருக்கவே இருக்கு.. ஜாயின் மை வெட்டிங்...