viral video
viral video twitter
இந்தியா

சட்டீஸ்கர் | பூங்காவில் காதலர்களை விரட்டிவிரட்டி விசாரணை நடத்திய பாஜக எம்.எல்.ஏ... #Viralvideo

Prakash J

சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ரிகேஷ் சென். பாஜகவைச் சேர்ந்த இவர், துர்க் மாவட்டத்தில் உள்ள வைஷாலி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது தொகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காதலர்களிடம் சென்று விசாரணை நடத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பூங்காவில் விரட்டப்படும் காதலர்கள் எம்.எல்.ஏ ரிகேஷிடம், ”நாங்கள் நேரம் செலவழிக்கவும் பேசவுமே இங்கு வந்தோம். நீங்கள் ஓயோ (OYO) விடுதிகளை அடைத்துவிட்டீர்கள். அதனால் பூங்கா மட்டுமே எங்களுக்கு உள்ளது. தனியாகச் சந்திக்க இடமில்லை” எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து அவர், ”பூங்காவில் காதலர்கள் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதாக எனக்கு தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. அதை விசாரிப்பதற்காகவே வந்தேன். விரைவில் இது போன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க ‘லைலா மஜ்னு’ பிரிவு உருவாக்கப்படும்” என ரிகேஷ் சென் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செய்தித்தாள்களில் புதிய மன்னிப்பு விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி!

மேலும் இதுகுறித்து வீடியோவை அவர் பகிர்ந்து, "இந்த வீடியோவின் மூலம் அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன், பூங்காக்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றது. பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடக்கூடாது. அவர்களின் நடத்தை மற்றவர்களைப் பாதிக்கலாம். இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் அனுமதிக்கபடாத விடுதிகள் மீது ரிகேஷ் சென் நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே, பூங்காக்களில் காதலர்கள் அதிக அளவில் வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கூட்டுறவு வங்கி மோசடி புகார்| அஜித் பவார் குடும்பத்திற்கு 'க்ளீன் சீட்' கொடுத்த மும்பை காவல்துறை!